Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மின்சார மீட்டர் மாற்றினால் உண்மையிலேயே கரண்ட் பில் குறையுமா? தமிழக மின் வாரியம் சொல்லாத ரகசியம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பழைய மின்சார மீட்டர்களுக்குப் பதிலாகப் புதிய டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.. இந்த மாற்றம் நிகழ்ந்த உடனேயே பல வீடுகளில் மின்சாரக் கட்டணம் எகிறி இருப்பதை மக்கள் கவனித்து வருகின்றனர்.. இதனால் பழைய மீட்டரே பரவாயில்லை என்ற எண்ணம் பரவலாக எழுந்துள்ளது.. இதற்கு என்ன காரணம்? உண்மையில் மீட்டர் மாற்றினால் பில் குறையுமா அல்லது கூடுமா? அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

பொதுவாக பழைய அனலாக் மீட்டர்கள் எனப்படும் சுழலும் வட்டு கொண்ட மீட்டர்கள் நீண்ட காலப் பயன்பாட்டிற்குப் பிறகு அதன் துல்லியத் தன்மையை இழந்துவிடுகின்றன..

TNEB

மின்சார கட்டணம்

பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் அந்த மீட்டர்களில் உள்ள இயந்திர பாகங்கள் தேய்மானம் அடைவதால் மின்சார பயன்பாட்டை அவை குறைவாகவே பதிவு செய்யும்.. ஆனால் நவீன டிஜிட்டல் மீட்டர்கள் மிகக் குறைந்த அளவு மின் கசிவை கூடத் துல்லியமாகக் கணக்கிடும் திறன் கொண்டவை..

வீட்டில் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் பிளக் பாயிண்ட்டில் செருகப்பட்டிருக்கும் சார்ஜர்கள் அல்லது டிவியின் ஸ்டேண்ட்பை மோட் போன்றவற்றால் உறிஞ்சப்படும் மிகச் சிறிய மின்சாரத்தை கூட இந்தப் புதிய மீட்டர்கள் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.. இதனால் பழைய மீட்டரில் வராத சில யூனிட்டுகள் புதிய மீட்டரில் பதிவாகி பில் கூடுதலாகத் தெரிய வாய்ப்புள்ளது..

எனவே, மீட்டர் மாற்றிய பின் பில் குறைய வேண்டும் என்றால் உங்கள் வீட்டின் மின் இணைப்புகள் மற்றும் வயரிங் மிகச் சரியாக இருக்க வேண்டும்..

பழைய வயரிங்

பழைய வயரிங் அல்லது சுவர்களில் ஏற்படும் ஈரப்பதத்தினால் ஏற்படும் சிறு மின் கசிவுகள் பழைய மீட்டர்களில் பெரும்பாலும் பதிவாகாது.. ஆனால் புதிய மீட்டர் வந்தவுடன் இந்தப் பிரச்சனைகள் அனைத்தும் "யூனிட்"களாக மாறி உங்கள் பாக்கெட்டைப் பதம் பார்க்கின்றன.. எனவே மீட்டர் மாற்றப்பட்ட பிறகு பில் கூடுகிறது என்றால் அது மீட்டரின் தவறு என்று மட்டும் சொல்ல முடியாது.. உங்கள் வீட்டின் மின் சாதனங்களின் தரம் மற்றும் வயரிங் அமைப்பையும் நாம் சோதிக்க வேண்டியது அவசியமாகும்..

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொறுத்தவரை அவை ரிமோட் மூலமாகவே கணக்கெடுக்கப்படுவதால் ஆட்கள் வந்து தவறுதலாக கணக்கிடும் வாய்ப்புகள் குறைகின்றன..

மின்சார வாரியம் இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதன் முக்கிய நோக்கமே மின் இழப்பைத் தடுத்து துல்லியமான வருவாயைப் பெறுவதுதான்.. சாதாரண மக்களுக்கு இது ஆரம்பத்தில் சுமையாகத் தெரிந்தாலும் நீண்ட கால அடிப்படையில் மின் சேமிப்பிற்கு இது வழிவகுக்கும்..

என்ன செய்யலாம்

உங்கள் வீட்டுப் பழைய மீட்டரை மாற்றிய பின் திடீரென பில் உயர்ந்தால் முதலில் செய்ய வேண்டியது அனைத்து மின் சாதனங்களையும் அணைத்துவிட்டு மீட்டரின் பல்ஸ் துடிக்கிறதா என்று பார்ப்பதுதான்.. அப்படித் துடித்தால் உங்கள் வீட்டில் மின் கசிவு இருக்கிறது என்று அர்த்தம்..

அதனைச் சரி செய்தாலே பில் தானாகக் குறையும்.. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே மின்சாரக் கட்டணத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.. மீட்டர் மாற்றம் என்பது வெறும் கருவி மாற்றம் மட்டுமல்ல அது நம் மின் பயன்பாட்டு முறையைச் சீரமைப்பதற்கான ஒரு எச்சரிக்கையும் கூட..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+