TNPSC குரூப் 1 முடிவுகள் வெளியானது.. நேர்காணல் தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!
சென்னை: கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதி நேர்காணல் நடைபெறும் என TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்தனர்.

குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற்றது. சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கடந்த டிசம்பர் மாதம் நடத்திய குரூப் 1 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஜூன் மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
நேர்காணலுக்கான அழைப்பு கடிதங்கள் விரைவில் TNPSC இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதித் தரவரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன் அடிப்படையில், இடஒதுக்கீடு மற்றும் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பணி நியமனங்கள் இருக்கும்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications