TNPSC குரூப் 1 தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்.. ஹால் டிக்கெட் வெளியீடு! டவுன்லோடு செய்வது எப்படி?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம். தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை, www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in ஆகிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர் உள்ளிட்ட 72 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப்-1 முதல் நிலை தேர்வை, 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் எழுதியிருந்தனர்.

இந்நிலையில், முதல்நிலைத் தேர்வில் தேர்வானவர்களுக்கு முதன்மைத் தேர்வு சென்னையில் வருகிற டிசம்பர் 1 முதல் டிசம்பர் 4 வரை மற்றும் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறுகிறது. சென்னையில் உள்ள மையங்களில் மட்டுமே இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1, 1A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 1 முதல் 4 மற்றும் டிசம்பர் 8 முதல் 10 வரை சென்னை மையங்களில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவிக்கை எண்கள்: 04/2025 (01.04.2025) மற்றும் 05/2025 (04.2025) வாயிலாக நேரடி நியமனத்திற்கு வெளியிடப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி-I பணிகள்) மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-A (தொகுதி-IA பணி) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 15.06.2025 அன்று முற்பகல் நடைபெற்றது.
இதற்கான முதன்மை எழுத்துத் தேர்வு (விரிந்துரைக்கும் வகை) 01.12.2025 முதல் 04.12.2025 மற்றும் 08.12.2025 முதல் 10.12.2025 முற்பகல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் www.tnpscexams.gov.in மற்றும் www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR DASHBOARD) மூலமாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications