9 ஆயிரம் பேர் எழுதுற எக்ஸாம்க்கு.. சென்டர் போட முடியலையா? தேர்வர்கள் ஆவேசம்!
சென்னை: கடைசி நேரத்தில் நடந்த குளறுபடி காரணமாக, இன்று நடக்க இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெறும் 9 பேர் எழுதும் தேர்வுக்கு உங்களால் சரியாக சென்டர் போட முடியாதா? என்று டிஎன்பிஎஸ்சி-க்கு கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், முதல் நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வுகளுக்கு முதன்மை தேர்வு இன்று காலை நடைபெற இருந்தது.

என்ன பிரச்சனை?
குரூப் 2 பதவிகளுக்கான முதன்மை தேர்வு காலையிலும், பிற்பகலில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ் தகுதி தேர்வும் நடைபெற இருந்தது. ஆனால், குளறுபடி ஏற்பட்டதால் தேர்வர்கள் ஆவேசமடைந்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட தேர்வர்கள், 9,000 பேர் எழுதுற எக்ஸாமுக்கு முறையாக சென்டர் கூட போட முடியவில்லையா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தனர்.
தேர்வு மையம்
தேர்வு எழுத காலை, 8.15 மணிக்கு மையத்துக்கு வந்ததாகவும் ஆனால், தேர்வு எண் இல்லாததால் தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர். வழக்கமாக மையத்தில் யாரெல்லாம் தேர்வு எழுதலாம் என்று எண் வெளியிடப்பட்டிருக்கும். இந்த எண் தேர்வர்களிடமும் இருக்கும். தேர்வர்களின் எண்ணும், மையத்தில் உள்ள எண்ணும் சரியாக இருந்தால்தான் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வர்களை அலைய விட்ட அதிகாரிகள்
சென்னை அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையத்தில், தேர்வர்களிடம் எண் இருந்தது. ஆனால், தேர்வு மையத்தில் அந்த எண் இல்லை. கடைசி நேரத்தில் அரும்பாக்கத்தில் இருந்த தேர்வர்களை நந்தனம் போக சொல்லியிருக்கிறார்கள். வெறும் 5 நிமிடங்களுக்கு முன்னர் திடீரென மையம் மாற்றப்பட்டால் எப்படி போவது? என்று கேள்வி எழுப்பி தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். தேர்வர்களின் போராட்டத்தை தொடர்ந்து தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ அறிவிப்பை கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
தேர்வும் குழப்பமும்
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் 2 பதவிகளுக்கு 1,126 பேரும் 2ஏ பதவிகளுக்கு 9,457 பெரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கு இன்று காலை குரூப் 2 பதவிகளுக்கான முதன்மை தேர்வும், பிற்பகலில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ் தகுதி தேர்வும் நடைபெற இருந்தது.
இப்படி இருக்கையில்தான் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தேர்வு மையத்தில், தேர்வர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. தேர்வு ரத்து செய்யப்பட்டது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
"தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் மூன்று மையங்களில் தேர்வு நடத்த இயலவில்லை என்றும், தேர்வர்களின் நலனை முன்னிட்டு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மட்டுமல்லாது மறு தேர்வு நடத்தப்படும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். அதேபோல ஹால் டிக்கெட் விவரம் எஸ் எம் எஸ் மற்றும் ஈமெயில் மூலம் தெரிவிக்கப்படும்.
மற்றபடி பிப்ரவரி 22ம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 2 தேர்வு அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வுகளுக்கு சென்டர்கள் மீண்டும் சரிபார்த்து ஹால் டிக்கெட் மீண்டும் 13 ஆம் தேதி வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications