குரூப் 2 முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.. “அரசு வேலை” TNPSC வேகம் பெறுவதால் தேர்வர்கள் உற்சாகம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12 முதல் நடைபெற்று வந்த நிலையில், அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இந்த முதல் நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்பட்டது. இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிட்டது. இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வாணைய அலுவலகத்தில் குரூப் 2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி (நேற்று) வரை நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்ற 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் பெற்ற நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 161 பணியிடங்களுக்கான மதிப்பெண் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரபூர்வ வலைதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்வியூ முடிந்த அதே நாளில் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நேர்முகத் தேர்வு பணியிடங்களுக்கான நடைமுறை முடிந்தபின்னர், நேர்காணல் அல்லாத் பணியிடங்க்ளுக்கான நடைமுறை தொடங்கும். அதன்படி, விரைவில், குரூப் 2 நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான முடிவுகளும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவில் நீதிபதி தேர்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. நேர்முகத் தேர்வுகள் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில் தேர்வு முடிவுகளை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம். அதேபோல, குரூப் 2 நேர்காணல் பணியிடங்களுக்கான முடிவுகளும் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தலைவர் மற்றும் பல உறுப்பினர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. டிஎன்பிஎஸ்சி தேர்வாணைய பதவிகளே காலியாக உள்ளதால், அரசு துறைகளின் காலி பணியிடங்களை நிரப்பும் டிஎன்பிஎஸ்சி-யின் நடைமுறையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தேர்வர்கள், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி (நேற்று) வரையிலான 15 நாட்களில் மட்டுமே 1,253 பேர், அரசுப் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,253 நபர்கள் இந்த பிப்ரவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications