TNPSC குரூப் 4 பணிக்கு தகுதி பெற்றவர்கள் பட்டியல் வெளியீடு.. சான்றிதழ் பதிவேற்றம் செய்வது எப்படி?
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தகுதி பெற்றோருக்கான கணினி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான (Onscreen Certificate Verification) தேர்வர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பட்டியலில் இடம்பெற்றவர்கள் வரும் நவம்பர் 7-ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், மற்றும் வனக்காவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவை கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

குரூப் 4
குரூப் 4 தேர்வு மூலம் ஆண்டுக்கு சராசரியாக 3500 காலியிடங்கள் நிரப்பப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு 4,662 காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானது. இந்தத் தேர்வுக்கு மட்டும் சுமார் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சத்து 48 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தும் தேர்வுகளில் பல்வேறு இடஒதுக்கீடு முறைகள் பின்பற்றப்படுகின்றன. இதில் அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் 1% பழங்குடியினர் பிரிவுக்கும், 15% ஆதிதிராவிடர் பிரிவினருக்கும், 3% ஆதிதிராவிட அருந்ததியர் பிரிவினருக்கும், 26.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (முஸ்லீம் அல்லாதோர்), 3.5% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம்க்கும், 20% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர் மரபினருக்கும் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 31% இடங்கள் பொது முறையின் கீழ் நிரப்பப்படுகிறது.
கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்பு
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு (Onscreen Certificate Verification) தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை 29.10.2025 முதல் 07.11.2025 வரை தேர்வாணைய இணையதளத்தின் ஒருமுறைப் பதிவு பிரிவின் (One Time Registration Platform) மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சான்றிதழ்களை உரிய நேரத்திற்குள் பதிவேற்றம் செய்யாத தேர்வர்கள், தேர்வின் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
கணினிவழித்திரை சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிகளுக்கு பொதுப் பிரிவினர் மற்றும் அனைத்து இடஒதுக்கீடு பிரிவினர் முறையே 1:3/1:2 என்ற விகிதத்திலும், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், வனக் காவலர், வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) பதவிகளுக்கு அனைத்து பிரிவினர்களும் 1:6 என்ற விகிதத்திலும் அனுமதிக்கப்படுவார்கள்.
பணி நியமனம்
கணினி வழி சரிபார்ப்புக்கு பிறகு எழுத்துத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் நியமனங்களுக்கான இடஒதுக்கீடு விதிக்கு உட்பட்டு, தேர்வர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு (பொருந்தக்கூடிய இடங்களில்) அனுமதிக்கப்படுவார்கள்.
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை III பதவிகளுக்கு பொதுப் பிரிவிற்கு 1:3 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:1.5 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தட்டச்சர் பதவிக்கு, பொதுப் பிரிவிற்கு 1:3 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:2 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர், ஆகிய பதவிகளுக்கு, பொதுப் பிரிவிற்கு 1:1.2 என்ற விகிதத்திலும், அனைத்து இடஒதுக்கீடு பிரிவுகளுக்கும் 1:1.1 என்ற விகிதத்திலும் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கலந்தாய்வு எப்படி நடைபெறும்?
கலந்தாய்வு நடைபெறும்போது, பதவிகளின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை / அலகு (யூனிட்) தொடர்பான விவரங்கள் Video Projector மூலம் காண்பிக்கப்படும். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பத்து நொடிக்கும் புதுப்பிக்கப்படும். விண்ணப்பதாரரின் விருப்பத் தேர்வு அடிப்படையில், பதவி / அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒதுக்கீட்டு ஆணை தனிப்பட்ட பார் குறியீடு (Bar code) அடையாளத்துடன் அப்பொழுதே வழங்கப்படும். அனைத்து செயல்முறைகளும் CCTVன் மூலம் கண்காணிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேவையான ஆவணங்கள்
1). சமீபத்திய புகைப்படம்
2). 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
3). 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்
4). பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்
5). சாதிச் சான்றிதழ்
6). தமிழ் வழிச் சான்றிதழ்கள் (தேவைப்படின்)
7). சிறப்பு இடஒதுக்கீட்டு சான்றிதழ்கள் (தேவைப்படின்)
8). தட்டச்சர், சுருக்கெழுத்து, கணினி சான்றிதழ்கள் (தேவைப்படின்)
9). உறுதிமொழிப் படிவம்
இதில் சாதிச் சான்றிதழில் தந்தை பெயர் இருக்க வேண்டும். கணவர் பெயரில் இருக்கும் சாதிச் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படாது.
பதிவேற்றம் செய்வது எப்படி?
ஆவணங்களை பதிவேற்றம் செய்ய தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
முகப்பு பக்கத்தில் Registered User என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்கள் ஒருமுறை பதிவெண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைக் கொண்டு உள்நுழைய வேண்டும்.
இப்போது உங்களது சுயவிவரப் பக்கம் காண்பிக்கப்படும். அதில் Upload Documents என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் குரூப் 4 தேர்வுக்கான இணைப்பை தேர்வு செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆவணங்கள் அனைத்தும் 500kb-க்குள் இருக்க வேண்டும். மேலும் pdf வடிவில் இருக்க வேண்டும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications