Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு தூக்குதே அரசு பஸ்..நீங்க வந்தா மட்டும் போதும்! ஒரு வருஷத்துக்கு இலவச பயணம்.. என்ன செய்யனும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஆண்டு முழுவதும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 20,000 மேற்பட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்களை சுமந்து பயணிக்கின்றன. குறிப்பாக கடைக்கோடி கிராமங்களுக்கும் மலைப்பகுதிகளுக்கும் அரசு பேருந்து சேவை தான் வரப்பிரசாதமாக உள்ளது.

மேலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ், மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை, பெண்களுக்கு இலவசப் பயணம் என அரசு பேருந்து சேவையை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.

TNSTC Free Bus tn govt

தமிழகத்தை பொறுத்தவரை ஏராளமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை பெருநகர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், அது மட்டுமல்லாமல் விழுப்புரம், சேலம், மதுரை, நெல்லை, கோவை ஆகிய கோட்டங்களின் தினந்தோறும் 17,000 அரசு பேருந்துகள் சுமார் 18000 கிராமங்களுக்கு தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் நீண்ட தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற விழா காலங்களில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிக அளவில் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்னரே முன்பதிவு ஆரம்பித்தாலும் உடனடியாக அரசு பேருந்து டிக்கெட் விற்று தீர்ந்து விடுகின்றன. மேலும் தற்போது கோடை விடுமுறை தொடங்கி இருக்கும் நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றனர். இதை அடுத்து கோடைகால சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது கோடைகாலத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து ஆண்டு முழுவதும் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்,"01.04.2025 முதல் 15.06.2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து கீழ்கண்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு - 25 நபர்கள் - தமிழ்காடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்துக்கு 20 முறை இலவச பயணம் (O.07.2025 முதல் 30.06.2026 வரை)

இரண்டாம் பரிசு - 25 நபர்கள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப்பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருத்துகளிலும் முன்பதிவு செய்து ஒரு வருடத்தில் 10 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.08.2026 வரை)

மூன்றாம் பரிசு - 25 நபர்கள் - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், முன்பதிவு வசதியுள்ளஅனைத்து வகை பேருந்துகளிலும் முன்பதிவு செய்து 05 முறை இலவச பயணம் (01.07.2025 முதல் 30.06.2026 வரை)

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுங்கள். நீங்களும் போட்டியின் வெற்றியாளர்களில் ஒருவராக இருக்கலாம்! முன்பதிவு செய்ய: www.tnstc.in மற்றும் TNSTC அதிகாரபூர்வ மொபைல் செயலியை பயன்படுத்தவும்." என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+