சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாங்க மோடி.. போங்க மோடி.. எதிர்ப்பாளர்களும் பாஜகவினரும் மாறி மாறி சண்டை.. டிவிட்டரில்!

பிரதமர் வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் ட்விட்டரில் பெருகி வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை ஐஐடி-யில் பிரதமர் மோடிபேச்சு -வீடியோ | PM Modi addresses Convocation ceremony of IIT Madras

    சென்னை: பிரதமர் நரேந்திர மோடி வந்தாலே கோ பேக் மோடியை கையில் எடுத்து விடுகிறார்கள் எதிர்ப்பாளர்கள். ஆரம்பத்தில் இதை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த மோடி ஆதரவாளர்கள் இப்போது பதிலுக்கு தமிழ்நாடு வெல்கம்ஸ் மோடி என்று கிளம்பி விட்டனர்.

    பிரதமர் மோடி தமிழகம் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது என்று ஆரம்பித்த எதிர்ப்பு பின்னர் பல ரூபங்களை எடுத்தது. கருப்பு பலூன் விட்டு பதற வைத்தார் வைகோ. தொடர்ந்து டிவிட்டரில் கோ பேக் மோடியை டிரெண்ட் செய்ய ஆரம்பித்து புதிய வரலாறு படைத்தனர்.

     #TNWelcomesPMModi vs #gobackmodi

    மோடி எப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அப்போதெல்லாம் இது டிரெண்ட் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்றும் சென்னைக்கு வந்த மோடியை எதிர்த்து போராட்டங்கள் களை கட்டியிருந்தன. ஆனால் அது சோபிக்கவில்லை.. டிவிட்டரிலும் கூட கோ பேக் மோடி எடுபடவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.

    இது மோடியை வரவேற்று போடப்பட்ட டிவீட். 2 % டிவீட்டுகள்தான் உண்மையானவை. மற்றவை லத்தீன் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்பிரிக்காவிலிருந்து போடப்பட்டவையாகும் என்று கலாய்த்துள்ளனர்.

    இந்த ட்வீட் போடாம இருந்தா இன துரோகி என வரலாற்றில் அவமானம் நேரும் #gobackmodi எனது கடமையை செஞ்சிட்டேன்

    கடந்த 3 நாட்களில் ஐ.நா. சபையில் தமிழை உயர்த்திப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. உலகிலேயே மிக பழமையான மொழி என்று புகழ்ந்துள்ளார். தமிழகத்திற்கு புதிய 6 மருத்துவக் கல்லூரிகளை அறிவித்துள்ளார். எனவே தமிழர்கள் மோடியை நிச்சயம் வரவேற்பார்கள். பிரிவினைவாத சக்திகளின் சதியில் சிக்க மாட்டார்கள் என்பது இன்னொரு ஆதரவு டிவீட்.

    இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தமிழ்நாட்டில் திணிங்கடா. ஐநாவில் யாதும் ஊரே யாவரும் கேளிர்

    தமிழகம் ஏன் மோடியை எதிர்க்க வேண்டும். அவருக்கு வெறுப்பாளர்களை விட ஆதரவாளர்களே அதிகம் உள்ளனர்.

    இன்னும் ஒரு காலை நேரம்.. மக்கள் ஏற்கனவே கோ பேக் மோடியை டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

    தமிழகத்தின் கலாச்சாரமே வருபவர்களை வரவேற்பதுதான். கருப்புச் சட்டை போட்ட கும்பல் கோ பேக் என்று சொல்கிறது. இவர்கள் தமிழர்களே இல்லை. இவர்கள் கூலிக்கு மாரடிப்பவர்கள். குவார்ட்டர் மதுவுக்காக பெற்ற தாயைக் கூட விற்கத் தயங்காதவர்கள் என்று காட்டமாக சாடுகிறது இது.

    தமிழ்நாடு காட்டுத் தீ போன்றது. இங்கு வந்து மோதினால் பொசுங்கிப் போவீர்கள்.

    English summary
    Battle Of The Two Hashtags Taking Place like #TNWelcomesPMModi vs #gobackmodi. Controversial and supportive comments against the Prime Minister are going viral
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X