1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்கள்... வீடியோ பதிவு.. பள்ளி கல்வித்துறை அறிக்கை
சென்னை: ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பாடங்களை வீடியோவாக மாற்றி பதிவு செய்யும் பணிகளை தகுந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோ பதிவு செய்யும் பணியை தகுந்த ஆசிரியா்களைத் தேர்வு செய்து, மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் தற்போதைய நிலையில் பிளஸ் 2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப் பதிவு மேற்கொள்ப்பட்டுள்ளது. இந்த பணியை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேற்கொண்டன. இதையடுத்து 11ம் வகுப்பிற்கான அனைத்து பாடங்களையும் வீடியோ பதிவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விரைவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பாடங்களை வீடியோவாக பதிவு செய்யமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் கலந்து ஆலோசித்து, கருத்தாளா்களைத் தெரிவு செய்து, படப்பதிவு மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப் பதிவினை மேற்கொள்ளச் செய்யாமல், வெவ்வேறு ஆசிரியா்களை பயன்படுத்த வேண்டும்
இதற்கு உரிய பாட ஆசிரியா்களைத் தெரிவு செய்வதுடன், அவா்களுக்குத் தலைமை ஆசிரியா்கள் வாயிலாக தகவலளித்து, மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்ளும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆசிரியா்களை அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம், பணிகள் தொய்வின்றி நடைபெற அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications