பாமக இளைஞரணித் தலைவர் பதவி! அன்புமணி இடத்திற்கு யார்?தைலாபுரம் தோட்டத்தில் தீவிர ஆலோசனை!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணித் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில் அந்தப் பதவிக்கு யாரை தேர்வு செய்வது என்ற ஆலோசனை தைலாபுரம் தோட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இது நாள் வரை அன்புமணி ராமதாஸ் வகித்த பதவி என்பதால் பாமக இளைஞரணி தலைவர் பதவிக்கு பார்த்து பார்த்து ஆள் தேர்வு செய்யும் படலம் தொடங்கியிருக்கிறது.
பாமக மாவட்டச் செயலாளர்களுடன் ராமதாஸ் கலந்தாய்வு நடத்திய பிறகு இது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாமக இளைஞரணி
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக புரோமோஷன் ஆகியுள்ள அன்புமணி ராமதாஸ், இதுநாள் வரை அக்கட்சியின் இளைஞரணித் தலைவராக இருந்தார். இந்நிலையில் இப்போது காலியாகவுள்ள அந்தப் பதவியிடத்துக்கு புதிய நபர் ஒருவரை தேர்வு செய்யும் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. தைலாபுரம் தோட்டத்தில் இது தொடர்பான டிஸ்கஷன் நடந்து வருகிறது. அதில் மாம்பழ நகரை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரது பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.

அன்புமணிக்கு ஒத்திசைந்து
அன்புமணி ராமதாஸின் வேகத்திற்கு ஈடு கொடுத்து, அவரது எண்ணவோட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்து, கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டக் கூடிய ஒருவரை பாமக இளைஞரணித் தலைவராக்க விரும்புகிறாராம் ராமதாஸ். இதனால் தான் இளைஞரணித் தலைவர் நியமனத்தில் அவசரம் காட்டாமல் பொறுமையாக ஆரய்ந்து வருகிறாராம். இதனிடையே வரும் ஞயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பாமக மாவட்டச் செயலாளர்களை தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்திருக்கிறார் ராமதாஸ்.

முக்கிய ஆலோசனை
அந்தக் கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் நியமனம், அன்புமணி ராமதாஸை வைத்து கட்சி நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்துவது பற்றியெல்லாம் ஆலோசிக்க உள்ளாராம். இனி வரும் நாட்களில் பாமக சார்பில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை அதிகம் நடத்தும் திட்டத்தில் உள்ள அன்புமணி, அந்தக் கூட்டங்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் இளைஞர் பட்டாளத்தை பெருமளவில் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் பகீரத முயற்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மது விலக்கு
அன்புமணி ராமதாஸ் பாமக இளைஞரணித் தலைவராக இருந்த போது மதுவிலக்குக்கு எதிராக அவர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் இன்றளவும் பேசத்தக்க வகையில் உள்ளது. இதனால் தன்னை காட்டிலும் இளைஞரணித் தலைவராக வரவிருப்பவர் இன்னும் வீரியமாக கட்சிப்பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது புதிய இளைஞரணித் தலைவர் தேர்வுக்கான அன்புமணியின் நிபந்தனையாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications