இன்று கோடைக்கு இணையாக வெயில் கொளுத்தும்! 4 டிகிரி வரை உயருமாம்.. எந்த ஊர்களில் ரொம்ப மோசம்!
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தொடங்காத நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயில் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் வானிலை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. குறிப்பாகப் பல வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருவதால் அங்கே விளைச்சலும் பாதிக்கப்பட்டு காய்கறி விலையும் கூட உயர்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் இதற்கு நேர்மாறான வானிலையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் இந்தாண்டு பருவமழை எங்கும் பெரிதாகப் பெய்யவில்லை. அதிலும் குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களாக வெப்பமான வானிலையே நிலவி வருகிறது.

வானிலை: இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 1 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல நாளை ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை இன்று 01.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பம் மோசம்: தமிழ்நாட்டில் நேற்று கோடை காலத்தில் இருந்ததை போலவே கடுமையான வெப்பம் நிலவி வந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 15 இடங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. பல நாட்களுக்குப் பிறகு இத்தனை மாநிலங்களில் வெப்பம் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அடுத்து தூத்துக்குடி, ஈரோடு பகுதிகளில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் வெப்பம் சதமடித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எங்கும் பெரியளவில் மழை பெய்யவில்லை.. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் தேவாலா, கூடலூர் பஜார், பந்தலூர் தாலுகா அலுவலகம் பகுதிகளில் 10 மிமீ மழை பெய்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்கக்கடல் பகுதிகளில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேலும் இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகளில் இன்று ஆகஸ்ட் 1 கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்ன பறக்குது.. போலீசாரை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications