வியர்க்கும் "வேலூர்".. சுட்டெரிக்கும் சூரியன்..2 நாளைக்கு வெயில் வாட்ட போகிறதாம்.. எங்கேன்னு பாருங்க
இன்றும் நாளையும் வெயில் அதிகம் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது
சென்னை: தமிழகத்தில் 10 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை எட்டிய நிலையில், இன்றும் நாளையும் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே வெயிலில் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது...
மக்கள் யாருமே வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.. வீட்டிற்குள்ளேயே அனல் கொட்டி வருகிறது.. சாலைகளில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றனர்.

வெயில்
அதுவும், மார்ச் மாதம் அடித்த வெயிலை பார்த்து தமிழக மக்கள் தலைசுற்றி போய்விட்டார்கள். இப்பவே இவ்வளவு வெயில் என்றால், மே மாதம் எப்படி இருக்க போகிறதோ என்ற கவலையும் சேர்ந்தே அதிகரித்தது.. மார்ச், ஏப்ரல் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவாகிவிட்டது.. எனினும், தமிழகத்தில் கடந்த இருவாரங்களாக தென் மாவட்டங்களில் நல்ல மழை

மழை
அதனால், தென் மாவட்டங்களில் பல இடங்களில் குளிர்ந்த சூழல் நிலவியது... ஆனால், மறுபடியும் வெயில் வாட்ட ஆரம்பித்துவிட்டது.. நேற்று மட்டும் 10 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதில் பீதியை கிளப்பிய மாவட்டம் வேலூர்தான்.. அதிகபட்சமாக 106.6 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டி வெயில், மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

வேலூர்
அதாவது, தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வேலூரில் 41.3 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.. கரூர்பரமத்தி, திருச்சி, திருத்தணியில் 105 டிகிரியும், ஈரோடு, சேலத்தில் 103 டிகிரியும், தருமபுரியில் 102 டிகிரியும், மதுரை, தஞ்சையில் 101 டிகிரியும் பதிவாகி வெப்பம் உள்ளது..
Recommended Video

பாளையங்கோட்டை
சென்னை சென்னை, பாளையங்கோட்டை 99 டிகிரியும், நாமக்கல்லில் 98 டிகிரியும் நேற்று பதிவானது.. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.. அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றைய தினம் வெப்பநிலை உயரும் என்று தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்குக்கூடும் என்று ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications