Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று நான் உயிரோடு இருக்கக் காரணமே அவர் தான்.. சிட்டி பாபுவை நினைத்து உருகிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை கொளத்தூர் பகுதியில் சிட்டிபாபு பெயரில் மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், "இன்று நான் உயிரோடு நின்று பேசுவதற்கு காரணம் சிட்டிபாபு தான். அதனால் அவர் பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மிசா சிறையில் இருந்த போது என் மீது விழ இருந்த அடியை அவர் வாங்கவில்லை என்றால் இன்றைக்கு நான் இல்லை" எனத் தெரிவித்தார்.

சென்னை கொளத்தூரில் 61.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முன்னாள் மேயராக இருந்த சிட்டிபாபு பெயர் இந்த மேம்பாலத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேம்பாலத்தில் நடந்து சென்று பார்வையிட்டார். தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க..ஸ்டாலின் உரையாற்றினார்.

Today I am alive and talking only because of Chitibabu : CM Stalin speech

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், 2021-ல் சட்டமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிறது. நாம் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த பாலம் கட்டக்கூடிய கனவு விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தி, பணிகளை வேகப்படுத்தியதன் காரணமாக, மேம்பாலப் பணிகள் நிறைவு கட்டத்திற்கு வந்தது. கடந்த மார்ச் மாதம் 8-ஆம் தேதியன்றுகூட மேம்பாலப் பணிகளை நான் ஆய்வு செய்தேன்.

உங்களின் நீண்டகால கனவு, இன்று நனவாகியிருக்கிறது. இது கொளத்தூர் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல, அருகில் இருக்கக்கூடிய வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கும் பெரும் பயனளிக்கக்கூடிய வகையில் இந்த மேம்பாலம் அமைந்திருக்கிறது. இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் என்று அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் நேரு என்னிடத்தில் கேட்ட நேரத்தில், உடனே மேயர் சிட்டிபாபு பெயர் சூட்டவேண்டும் என்று நான் சொன்னேன்.

Today I am alive and talking only because of Chitibabu : CM Stalin speech

இன்றைக்கு சென்னை மாநகரத்தில், பாலங்கள் இருந்தே போக்குவரத்து நெரிசல் இருக்கிறது என்றால், அந்த பாலங்கள் எல்லாம் இல்லையென்றால் என்னென்ன நிலையில் இருக்கும், சிந்தித்துப் பாருங்கள். முதன்முதலில் சென்னையில், மேம்பாலம் என்று கட்டியதே அண்ணா மேம்பாலம்தான், கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது. அந்த அண்ணா மேம்பாலம் இல்லையென்றால், என்ன நிலை? அண்ணா இல்லையென்றாலே நம்முடைய நிலை வேறு நிலையில் போயிருக்கும். அண்ணா மேம்பாலம் இல்லையென்றால் என்ன நிலை அதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

Today I am alive and talking only because of Chitibabu : CM Stalin speech

இன்றைக்கு இந்த பாலம் வருவதற்கு காரணமாக இருந்த இன்றைக்கு நான் உயிரோடு, இந்த மேடையில் நின்று பேசுகிற வாய்ப்பு, முதலமைச்சராக இருந்து, மக்களுக்கு ஆற்றுகிற அந்த கடமை, இந்த வாய்ப்பு எல்லாம் எனக்கு இருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் அண்ணன் சிட்டிபாபுதான். நான் அதைத்தான் நினைத்துப் பார்த்து உடனே அவர் பெயரை சொன்னேன். இன்றைக்கு அவருடைய பெயரால், மேயர் சி.சிட்டிபாபு என்ற அந்த பெயரில் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பாலத்திற்கும் பெயர் வைப்பது உண்டு. எத்தனையோ பாலங்களை பார்க்கிறோம்.

எமர்ஜென்சி காலத்தில் மிசா சிறையில் நான், முரசொலிமாறன் அடைக்கப்பட்டிருந்தபோது எங்களோடு ஓர் ஆண்டு காலம் அடைபட்டிருந்தவர் அண்ணன் சிட்டிபாபு. என் மீது விழ இருந்த அடிகளை அவர் மட்டும் குறுக்கே பாய்ந்து தடுத்திருக்காவிட்டால், நான் இல்லை. இன்றைக்கு உங்கள் முன்னால் தமிழ்நாட்டின் முதலமைச்சராக நான் இருக்கிறேன் என்று சொன்னால், அந்த நன்றி உணர்வு பெருக்கோடுதான் இந்த பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது தவிர வேறு அல்ல.

Today I am alive and talking only because of Chitibabu : CM Stalin speech

கருணாநிதி 1996-ல் முதலமைச்சராக இருந்த நேரத்தில் சென்னை மேயராக நான் பொறுப்பேற்றபோது, பல உறுதிமொழிகளை அதிலும் குறிப்பாக சென்னையை சிங்கார சென்னையாக மாற்றுவதற்கான உறுதிமொழி எடுத்தேன். அதையெல்லாம் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டது. ஆனால் பின்னால் வந்தவர்கள் எப்படி சீரழித்தார்கள் என்பது எல்லாம் உங்களுக்குத் தெரியும். எனினும், சிட்டிபாபு பெயரில் இன்றைக்கு இந்த பாலம் அமைந்திருப்பது என்பது அது மக்களுக்கு பயன்படப்போகிறது என்பதை எண்ணிப்பார்த்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்." எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+