கடைசி நாள்.. என்ன நடக்கும்? இன்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவை
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு பிறகு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இன்று நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்வுகள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
காவிரி நதி நீர் விவகாரம், அதிமுக - பாஜக கூட்டணி முறிவு, இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக வலுவடைந்து வரும் போராட்டங்கள் என பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கூடியது. வழக்கம்போல் மறைந்த எம்.எல்.ஏக்கள், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்ட பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். அதை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது காரசார விவாதம் நடைபெற்றது. அதேபோல், நேற்றைய நிகழ்வில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து, அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் என கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்தார்கள். இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் கூடுகிறது. கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கான தேவைகள், கோரிக்கைகளை எழுப்ப உள்ளார்கள். சட்டப்பேரவை உறுப்பினர்கள் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வர இருக்கிறார்கள்.
அதன் பின்னர் நிகழ் நிதியாண்டிற்கான துணை மதிப்பீடு நிறைவேற்றப்பட இருக்கின்றன. வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் மண்டல திருத்த சட்ட மசோதாவை தாக்கல் செய்கிறார். போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆட்டோ கட்டணங்களை முறைப்படுத்துவதற்கான இயக்க ஊர்திகள் சட்ட மசோதாவையும் தாக்கல் செய்ய உள்ளார். அதேபோல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பின் வாயிலாக நிறைவேற்றப்பட உள்ளன. இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகள் திட்டமிட்டப்படி நிறைவடைந்தால், தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications