கடைசி வாய்ப்பு.. தபால் ஓட்டு போட்டாச்சா? தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு இன்று லாஸ்ட் சான்ஸ்
சென்னை: தபால் ஓட்டு அளிப்பதற்கான கால அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது... எனவே, தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், தபால் வாக்கை செலுத்த இன்று கடைசி நாளாகும்.
எம்பி தேர்தலுக்கான நாளை வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரியில் ஒரேகட்டமாக நடக்க போகிறது.. வழக்கமாக அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள்.. அந்தவகையில் இந்த முறையும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்..

தேர்தல் பணிகள்: தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு மையத்தில் பணி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று, வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில், மக்களவைத் தோ்தல் பணியில் சுமாா் 5 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். இதற்கெனவே இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவா்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தபால் வாக்கைச் செலுத்த விண்ணப்பங்களை அளித்திருந்தனா்.
ஆசிரியர்கள்: எனவே, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் மற்றும் இதர பணியாளர்கள், தபால் ஓட்டளிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.. தொகுதிக்கு உள்ளேயே, தேர்தல் பணியாற்றுபவர்கள், வாக்குச்சாவடியில் ஓட்டளிப்பதற்கு வசதியாக, அவர்களுக்கு தேர்தல் பணி சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு செலுத்தும் பணி, நேற்று முன்தினம் நிறைவடைந்துவிட்டது என்றாலும், ஒரு சில இடங்களில், தபால் ஓட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, சம்பந்தப்பட்ட தொகுதியிலிருந்து தபால் ஓட்டு வரவில்லை என்று புகார் எழுந்தது.. இதை காரணம்காட்டி, சில இடங்களில் ஊழியர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனவே, விடுபட்டவர்களுக்கு தபால் ஓட்டளிக்க, இன்று வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அறிவுறுத்தல்: இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சொன்னபோது, தபால் வாக்கு செலுத்துவோர் 16ம் தேதிக்குள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பெரும்பாலானோர் ஓட்டளித்து விட்டனர். இருந்தாலும் ஒரு சிலர் தங்கள் தொகுதியில் இருந்து தபால் ஓட்டு வரவில்லை என்றனர். மேலும் சிலரால், 2வது பயிற்சி வகுப்பில் பங்கேற்காததால், தபால் ஓட்டை பெற முடியவில்லை..
அதனால், விடுபட்டவர்கள் தபால் ஓட்டளிப்பதற்காக, இன்று வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் தாங்கள் உள்ள பகுதி தேர்தல் அலுவலரிடம் சென்று, தபால் ஓட்டு பெற்று அங்கேயே ஓட்டளிக்கலாம்.
கடைசி வாய்ப்பு: இவ்வாறு பெறப்படும் தபால் ஓட்டுகளை, தேர்தல் நடத்தும் அலுவலர், ஜூன் 3ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட தொகுதி அலுவலருக்கு அனுப்பி வைப்பார். தபால் ஓட்டளிக்கும் பணி இன்றோடு முடிந்து விடும். அதன்பின், விடுபட்டோர் உட்பட யாரும் தபால் ஓட்டளிக்க முடியாது" என்றார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications