SIR:வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்.. பிப்.17-ல் இறுதி வாக்காளர் பட்டியல்!
சென்னை: வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த மாதம் 17 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பம் அளிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றன.

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எஸ்.ஐ.ஆர் கணக்கெடுபு பணி கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை நடைபெற்று வந்த நிலையில், கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
அதில், உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள் உள்பட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர், முகவரியில்இல்லாதவர்கள் 66.44 லட்சம்பேர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்குரிமை உள்ளவர்கள் 3.98 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவை தொடர்பாக விண்ணப்பிக்க ஜனவரி 18 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்திருந்தது. இதற்காக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
எஸ்ஐஆர் படிவங்களை முறையாக பூர்த்தி செய்யாதவர்கள் 12 லட்சம் பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் பிப்.10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க வும் பெயர் சேர்க்க ஏதுவாகவும் கடந்த வார விடுமுறை நாட்களான டிச.27, 28, ஜன. 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இதுவரை ஒட்டுமொத்தமாக சுமார் 12 லட்சத்து 80 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், அடுத்த மாதம் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications