ஆதாரை மின் இணைப்புடன் இணைக்க இன்றே கடைசி நாள்! மிஸ் செய்தால் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாது
ஆதார் மின் இணைப்பு கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
சென்னை: தமிழ்நாடு அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம், மற்றும் இதர மானியங்களைப் பெற ஆதார்- மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
தமிழ்நாடு முழுக்க தமிழ்நாடு மின்வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலம் முழுக்க சுமார் 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதேபோல 22 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன.
மேலும், குடிசை வீடுகளுக்கும் 11 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்திற்கும் தமிழ்நாடு மின்வாரியம் மூலமே மின்சாரம் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்வாரியம்
அதாவது தமிழ்நாடு முழுக்க அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மின் நுகர்வோர் குறித்து உரிய டேட்டாக்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்களை இணைக்கும் பணிகளைத் தமிழ்நாடு மின்வாரியம் இப்போது தொடங்கியுள்ளது.

ஆதார் இணைப்பு
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தைப் பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர் குறித்த உரிய டேட்டா இல்லை என்று கூறி, உரியத் தகவல்களைப் பெற ஆதார் மின் இணைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல மின்சார கட்டணத்தை ஆன்லைன் வழியாகச் செலுத்தவும் ஆதார்- மின் இணைப்பு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் மின் இணைப்பு குறித்த அறிவிப்பைக் கடந்த நவ. மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.

இணைக்கும் பணிகள்
அதன்படி, கடந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காகச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆதார் மின் இணைப்பு பணிகள் நடைபெற்றன. முதலில் டிச. 31ஆம் தேதிக்குள் ஆதாரை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின், அது பிப். 15 வரை முதலில் நீட்டிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு பிப். 28 வரை நீட்டிக்கப்பட்டது. பெரும்பாலானோர் தங்கள் ஆதாரை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துவிட்ட போதிலும், இன்னும் சிலர் இணைக்கவில்லை.

இன்றே கடைசி நாள்
இன்றே ஆதார் மின் இணைப்பு எண்ணை இணைக்கக் கடைசி நாள் என்பதால் இதுவரை ஆதாரை மின் இணைப்பை இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே, கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், இனிமேல் ஆதாருடன் மின் இணைப்பை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றே தெரிகிறது. அதேபோல மின் இணைப்புடன் தொடர்பே இல்லாதவர்களின் ஆதாரும் இணைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்த நிலையில், அதைச் சரி செய்யவும் இன்றே கடைசி நாளாகும்.

எப்படி இணைக்கலாம்
தமிழ்நாடு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கலாம். ஆன்லைன் மூலமும் ஆதாரை இணைக்கலாம். https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற தளத்திற்குச் சென்று, அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளை நிரப்பி, மொபைலுக்கு வரும் ஓடிபியை நிரப்பி.. ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அப்லோடு செய்து இணைக்க முடியும்.

கால அவகாசம் முடிகிறது
தமிழ்நாடு அரசின் 100 யூனிட் இலவச மின்சாரம், மற்றும் இதர மானியங்களைப் பெற ஆதார்- மின் இணைப்பு கட்டாயமாகும். எனவே, ஆதாரை இணைக்காதவர்கள் உடனடியாக அதை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல ஆன்லைன் மூலமும் மின்சார கட்டணத்தைச் செலுத்தவும் ஆதார் இணைப்பு கட்டாயம். இன்றுடன் இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடியும் நிலையில், ஆதாரை இணைக்காதவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றி இணைத்துக் கொள்ளலாம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications