10ம் வகுப்பு, 12ம் வகுப்பு மாணவர்களே.. இந்த சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றே கடைசி நாள்
சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.) சேருவதற்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
பிட்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர், வெல்டர் உள்பட பல்வேறு வகையான தொழிற்பயிற்சிகள் ஐடிஐயில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்த தொழிற்படிப்புகளை படித்து முடிப்பவர்களுக்கு இந்தியாவில் ஏராளமான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன.

10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் அல்லது 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐடிஐயில் சேர்ந்து படிக்கலாம். ஐடிஐகளில் சேர விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐ.டி.ஐ.) மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் 2023-ம் ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாநிலம் முழுவதும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும் பொழுது தங்களது அசல் ஆவணங்களான மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் ஆகியன பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகை மற்றும் விலையில்லா லேப்டாப், சைக்கிள், பாடப் புத்தகம், மூடு காலணி, சீருடை, சீருடைக்கான தையற்கூலி, வரைபடக்கருவிகள், இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் " என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications