கல்லக்குடி கொண்ட கருணாநிதி! கரகரத்த குரல்.. கம்பீர அரசியல்! ஒருமுறை கூட தோற்காத ’கலைஞர்’ எனும் ஆளுமை
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் ஆன கலைஞர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினம் இன்று.. இந்தியாவிலேயே அதிக காலம் ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்ற சாதனை படைத்ததோடு தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை தன்னகத்தை கொண்டிருப்பவர் கலைஞர் கருணாநிதியின் தேர்தல் வரலாற்றை சற்று சுருக்கமாக பார்க்கலாம்..
தமிழக அரசியலில் கலைஞர் கருணாநிதியின் பெயரை ஒதுக்கி வைத்து விட்டு ஒரு நிகழ்வை கூட பார்த்து விட முடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்.

திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் - அஞ்சுகம் மகனாகப் பிறந்த கருணாநிதி இளம் வயதிலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டவர். நீதி கட்சியின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.
இதுமட்டுமல்ல இலக்கியமும் கருணாநிதிக்கு கைவந்த கலையாய் இருந்தது. பள்ளி படிப்பை கூட முழுமையாக முடிக்காத அந்த இளைஞனுக்குள் தமிழ்த்தாய் தாண்டவம் ஆடினாள். கரகரத்த குரலில் 'என் உயிரிலும் மேலான எனது அன்பு உடன்பிறப்புகளே' என கலைஞர் பேசும் போது அச்சுப் பிசகாமல் எழுத்துக்கள் அப்படியே எதிரொலிக்கும். தொடர்ந்து தனது திறமையால் தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தைப் பெற்றார்.
ராஜகுமாரி படத்தின் மூலம் படத்தின் மூலம் 1947இல் வசனகர்த்தாவாக அறிமுகமானார் கலைஞர். அந்த படத்தின் ஹீரோ எம்.ஜி.ஆர். தொடர்ந்து திமுகவில் இணைந்த அவர் 33 வயதில் தனது முதல் தேர்தலை களம் கண்டார். 1957 இல் குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியிலும், அதற்கு பிறகு இரு தேர்தல்களில் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதனைத் தொடர்ந்து 1977 -1980 தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் எமர்ஜென்சி காலம் அதற்குப் பிறகு எம்ஜிஆரின் எழுச்சி கலைஞருக்கு சோதனையாகவே இருந்தது. ஆன போதும் கலைஞர் தோல்வியை சந்திக்கவில்லை. 1980 தேர்தலில் எம்ஜிஆர் அலை தமிழகம் முழுவதும் வீச கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது 61 ஆண்டு கால வாழ்க்கையில் 1984 தேர்தலில் மட்டும் போட்டியிடவில்லை.
தொடர்ந்து 1991 சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக திமுக பிரமுகர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் காங்கிரஸும்அதிமுகவும் கலைஞருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். திமுக படுதோல்வியை சந்தித்த அந்த தேர்தலில் கலைஞர் மட்டும் வெற்றி பெற்றார். ஆனால் தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
அதனை தொடர்ந்து 1996 முதல் 2006 வரை சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியிலும், 2011 தேர்தலில் தனது சொந்த ஊரான திருவாரூரிலும் போட்டியிட்டார், 2016 நடைபெற்ற தேர்தலில் திருவாரூரில் போட்டியிட்டார் கலைஞர் கருணாநிதி. அவர் போட்டியிட்ட கடைசி தேர்தல் அது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக அவர் சந்தித்த அனைத்து தேர்தல்களில் வெற்றிக் கனியை ருசித்த ஒரே தலைவர் கலைஞர் கருணாநிதி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
கள்ளக்குறிச்சி, பெரியகுளம் உள்பட விசிக போட்டியிடும் 8 தொகுதிகள் எவை! வெளியானது பட்டியல் -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications