சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புஸ்ஸாகிப் போன தினகரனின் ஆரூடம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் புஸ்ஸான தினகரன் கணிப்பு- வீடியோ

    சென்னை: தகுதிநீக்க தீர்ப்பு வெளியானால் அதிமுக ஆட்சி கவிழுமா அல்லது தப்புமா இல்லாவிட்டால் ஆட்களை இழுக்கும் வேலைகள் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எல்லாம் புஸ்ஸாகிப் போய் விட்டது.

    முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். இதனிடையே கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் 18 பேரும் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இதையடுத்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணா இன்று தீர்ப்பளித்தார். அதில் தகுதி ீக்கம் செய்தது சரியே என்று அவர் தீர்ப்பளித்து விட்டார்.

    [தமிழக அரசியலில் புயலை ஏற்படுத்தி இருக்கும் அந்த 18 எம்எல்ஏக்கள் யார் யார் தெரியுமா?]

    நம்பிக்கையில்

    நம்பிக்கையில்

    தகுதி நீக்க வழக்கு செல்லாது என்று தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையுடன் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் குதூகலமாக தங்கியிருந்தனர். அது போல் தகுதி நீக்க வழக்கு செல்லும் என்றே தீர்ப்பு வரும் என முதல்வர் எடப்பாடி தரப்பும் நம்பிக்கையில் இருந்தது.

    பலம்

    பலம்

    இந்த ஒற்றை தீர்ப்பு அதிமுக அரசு மற்றும் 18 பேரின் தலையெழுத்தை மாற்ற போகும் தீர்ப்பாக பார்க்கப்பட்டது. எனவே தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தால் என்ன நடக்கும் என்பதை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் தற்போது சட்டசபை உறுப்பினர்கள் பலம் 214 -ஆக குறைந்துள்ளது.

    தகுதி நீக்கம் செல்லாது

    தகுதி நீக்கம் செல்லாது

    ஆட்சியமைக்க 108 இருந்தாலே போதுமானது. இதனால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஒரு வேளை தகுதி நீக்கம் செல்லாது என தீர்ப்பு வந்திருந்தால் உறுப்பினர்கள் பலம் 232 ஆக உயர்ந்திருக்கும் (214+18).

    காலியாக உள்ள தொகுதிகள்

    காலியாக உள்ள தொகுதிகள்

    அப்படி நடந்திருந்தால், ஆட்சியமைக்க 117 உறுப்பினர்கள் தேவை. எனவே அதிமுகவுக்கு யாரும் ஆதரவு அளிக்காவிட்டால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டிருக்கும். சட்டசபையில் அதிமுகவுக்கு 109 இடங்களும், திமுக கூட்டணிக்கு 97 இடங்களும் சபாநாயகர் ஒருவர், அமமுகவுக்கு ஒரு இடமும், தோழமை கட்சிகளுக்கு 3 இடங்களும் உள்ளன. மேலும் தினகரன் ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேர் உள்ளனர். திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ளன.

    சபாநாயகர்

    சபாநாயகர்

    தற்போது அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து விட்டது. எனவே கருணாஸ் பகிரங்கமாக தினகரன் பக்கம் போவாரா என்பது தெரியவில்லை. அதேபோல தினகரனுக்கு ஆதரவாக இருந்து வரும் ரத்தினசபாபதி, எஸ்.ஆர். பிரபு, கலைச்செல்வன் ஆகியோரும் தொடர்ந்து பகிரங்கமாக ஆதரவு தெரிவிப்பார்களா அல்லது பின்வாங்குவார்களா என்பது தெரியவில்லை.

    English summary
    What will happen in 18 MLAs disqualification case? ADMK Government will be retained or dissolved? If TTV Dinakaran's statement will come true?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X