சென்னை அருகே புதிய விமான நிலையம்.. "இந்த" இரண்டில் ஒரு இடம்! எங்கு அமைகிறது ?
சென்னை: சென்னை அருகே புதிய விமான நிலையம் எங்கு அமைகிறது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டு இன்று முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
சென்னையில் விமான பயணத்தை அதிகம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதனால் இன்னொரு விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தாமதம்
இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவி வந்தது. இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த இரு இடங்களில் ஒரு இடத்தில் விமான நிலையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என கருதினர்.

மத்திய விமான போக்குவரத்து
இதையடுத்து அதுகுறித்த அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் வழங்கியது. மேலும் விமான நிலையத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணி தமிழக தொழில் துறையிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் டெல்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுடன் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவில் எந்த புதிய விமான நிலையம் அமைய போகும் இடம் இன்று இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

40 ஆயிரம் கோடி முதலீடு
சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் என்பது ரூ 40 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைகிறது. விமான நிலையம் எங்கே அமைப்பது என்பது தொடர்பாக கடந்த மாதம் 16 ஆம் தேதி அமைச்சர் சிந்தியா தலைமையில் உயரதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில் 2024 ஆம் ஆண்டு வாக்கில் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.

வேலைவாய்ப்பு
இது பிரதமரின் கனவு. இதை நான் நனவாக்க வேண்டும் என்றார். புதிய விமான நிலைய திட்டத்திற்கு 51 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குகிறது. இந்த விமான நிலையத்தில் 8 சர்வதேச முனையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த விமான நிலையம் மூலம் அடுத்த 8 ஆண்டுகளில் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications