விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி.. இன்று "ஜனநாயகன்" மறுசென்சார் இல்லை! கடைசி நேரத்தில் பிரச்சனை
சென்னை: ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சினையால் ரிலீஸ் ஆகாமல் முடங்கியுள்ளது. இதற்கிடையே ஜனநாயகன் திரைப்படம் இன்று மறு தணிக்கை செய்யப்பட இருந்த சூழலில், அது திடீரென தள்ளி போய் இருக்கிறது. எல்லா பிரச்சினைகளும் தீரும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டு இருந்த நிலையில், கடைசி நேரத்தில் மறு தணிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலில் நுழைந்துள்ள விஜய்யின் கடைசி படமாக உருவாகியுள்ள ஜனநாயகன் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக இருந்தது. இருப்பினும், படத்திற்கு சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. வழக்கு காரணமாகவே சென்சார் பிரச்சினை முடிவில்லாமல் போவதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

மறு தணிக்கை
வழக்கு இல்லாமல் இருந்தாலாவது மறு தணிக்கையை நோக்கிச் செல்லலாம்.. வழக்கு இருப்பதாலேயே மறு தணிக்கையிலும் சிக்கல் இருப்பதாக பல்வேறு வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து ஜனநாயகன் படக்குழு நீதிமன்றங்களில் இருந்து வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. மறு ஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளதாலேயே வழக்கை வாபஸ் பெறுவதாக ஜனநாயகன் படத்தைத் தயாரித்த KVN புரொடக்ஷன்ஸ் கூறியது. கடந்த மாதமே வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனால் அப்போதே படம் சென்சார் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், ரிவைசிங் கமிட்டி அமைக்கப்படவே சில வாரங்கள் பிடித்தது. இதனால் மறு தணிக்கைக்கான பிராசஸ் நடக்கவில்லை.
இன்று சென்சார்
இதனால் விஜய் ரசிகர்கள் குழப்பத்திலேயே இருந்தனர். இந்தச் சூழலில் தான் ரிவைசிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜனநாயகன் படம் இன்று மார்ச் 9ம் தேதி சென்சார் செய்யப்படும் எனத் தகவல் வெளியானது. மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (CBFC) மறு ஆய்வுக் குழு இந்த படத்தை இன்று பார்க்கவிருந்தனர். இன்று பிற்பகல் ரிவைசிங் கமிட்டி முன்பு படம் சென்சார் செய்யப்படும் எனத் சொல்லப்பட்டது.. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இருப்பினும் ரடைசி நேரத்தில் பட சென்சார் தள்ளி போய் இருக்கிறது. ஜனநாயகன் படம் இன்று மறு தணிக்கை இல்லை என சொல்லப்படுகிறது. தணிக்கை குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் நடைபெறவிருந்த மறு தணிக்கை ஒத்திவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த வாரமே ரிலீஸ்
இந்த காலத்தில் சினிமா புரோஜக்ஷன் எல்லாம் டிஜிட்டல் முறையிலேயே நடப்பதால்.. வெளிநாடுகளுக்குக் காப்பி அனுப்புவது தொடங்கி அனைத்து வேலைகளும் ஓரிரு நாட்களில் முடித்துவிட முடியும். எனவே, புதன்கிழமைக்குள் சென்சார் பஞ்சாயத்து முடிந்து, படம் தணிக்கை செய்யப்பட்டால் இந்த வாரமே படம் ரிலீஸாக வாய்ப்பு மிக மிக அதிகம்.
மார்கெட்டிங் காரணங்களுக்காக இந்த வாரம் ரிலீஸ் செய்ய முடியவில்லை என்றாலும் கூட அடுத்த வாரம் படம் ரிலீசாக வாய்ப்பு அதிகம். ஏனென்றால் கேஜிஎஃப் புகழ் யாஷ் நடித்திருந்த டாக்சிக் படம் அடுத்த வாரமே முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், மத்திய கிழக்கு சூழல் உள்ளிட்ட காரணங்களால் பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டாக்சிக் படம் வருவதால் அடுத்த வாரம் வேறு படங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது டாக்சிக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால்.. அடுத்த வாரம் ஜனநாயகனுக்கு பக்காவான ரிலீஸ் தேதி அமையும்.
லாஸ்ட் சான்ஸ்
மேலும், அடுத்த வாரம் ஜனநாயகனுக்கு கடைசி வாய்ப்பாகக் கூட இருக்கும். ஏனென்றால் விஜய் இப்போது அரசியலில் இருக்கிறார். இதனால் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. என்னதான் சென்சாரே ஆகியிருந்தாலும் கூட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டார்கள். இதனால் இன்று நடக்கும் மறு தணிக்கை ரொம்பவே முக்கியமானதாக மாறியுள்ளது.
-
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..











Click it and Unblock the Notifications