சுட்டெரிக்கும் வெயில்..மக்களை பாதிக்கும் வெப்ப அழுத்தம்..காரணம் கூறும் பாலச்சந்திரன்
சென்னை: தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல ஊர்களில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸ் தாண்டி பதிவாகி வருகிறது. வெப்பநிலை உயர்வுக்குக் காரணம் மோக்கா புயல்தான் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். வெப்ப அழுத்தம் உருவாக வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.
வெளியே நடமாடவே முடியாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி அனல் அனைவரையும் பதம் பார்க்கிறது. சென்னையின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகியுள்ளது. கோடை வெயிலில் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயில் சுட்டெரிப்பதற்கான காரணத்தை கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்,
வங்கக்கடலில் மோக்கா புயல் உருவாகி சில நாட்களுக்கு முன்பு கரையைக் கடந்தது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயர்ந்திருக்கிறது. இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளது.
சென்னை, கரூர், வேலூர், கடலூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக பதிவாகியுள்ளது. காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ள நிலையில் வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருவதால் வெப்ப அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் பாலச்சந்திரன் கூறினார். மக்களுக்கு இதனால் அசவுகரியம் உண்டாகும்.
சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு 45 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நடப்பாண்டு தற்போது 43 டிகிரி செல்சியஸ் வரைதான் வெப்பம் பதிவாகி வருகிறது. சென்னையில் கடல் காற்றின் வேகத்தைப் பொருத்து வெப்பத்தின் பாதிப்பும் இருக்கும். தமிழகம்,புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். சென்னையின் கடலோர பகுதிகளை விட புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார். வேலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட உள் மாவட்டங்களிலும் வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகாக்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
தற்போதய நிலைகளில் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையை பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் பகல் நேரங்களில் மக்கள் வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications