அனலாய் தகிக்கும் சூரியன்.. 2 நாட்களுக்கு ஜில்லென பெய்யும் மழை.. வானிலையின் ஹாட் அன் கூல் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 20,21ஆம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 30ஆம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவதாக பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 நாட்கள் அக்னி நட்சத்திர காலமாகும். அனல் காற்று வீசும். நடு சாலையில் முட்டையை உடைத்து விட்டு ஆம்லேட் போடும் அளவிற்கு வெயில் சுட்டெரிக்கும்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே அனலடிக்கிறது. வறண்ட வானிலை நிலவும் எனவும் வெப்பநிலை சராசரியை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்தது போல பல ஊர்களில் 40 டிகிரி செல்சியஸ் அதாவது 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 10க்கும் மேற்பட்ட ஊர்களில் வெப்பம், 38 டிகிரி செல்சியஸ் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தி, திருத்தணி, சேலம், வேலுார் மற்றும் ஈரோட்டில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, திருப்பத்துார், 39; கோவை, தர்மபுரி, தஞ்சாவூர், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
கரூர் பரமத்தியில்யில் இன்றும் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 19 வரை 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பநிலை அதிகபட்சமாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருநெல்வேலி, சேலம், திருப்பத்தூர், ராமநாதபுரம், வேலூர், ஈரோடு, மதுரை மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 20,21ஆம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவாகவும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications