Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழிக்குப் பழி?.. பாம்புக்கும் வாழ உரிமை உண்டு.. இன்று உலக பாம்புகள் தினம்.. திணறடித்த தென்காசி

உலக பாம்புகள் தினத்தையொட்டி, கடையநல்லூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஜூலை 16, சர்வதேச உலக பாம்புகள் தினம் ஆகும்.. இதையொட்டி கடையநல்லூரில் விழிப்புணர்வு பேரணிகள் நடைபெற்றதில் மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு வருடமும் ஜூலை 16 உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் தமிழகத்திலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.

இது பல்வேறு வகையான பாம்பு இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

விஷப்பாம்புகள்

விஷப்பாம்புகள்

உலக அளவில் எடுத்துக் கொண்டால், ஊர்வன வகையை சேர்ந்த பாம்பினங்கள் 3000 வகையான இருக்கின்றனவாம்.. நம் இந்தியாவில் மட்டும் 280 வகையான பாம்பினங்களும் இருப்பதாக கணக்குகள் கூறகின்றன.. இதில், விஷம் உள்ள பாம்புகள், விஷம் இல்லாத பாம்புகள் என 2 வகைகள் உண்டு.. கண்ணாடி விரியன், நல்ல பாம்பு , கட்டு விரியன் மற்றும் சுருட்டைவிரியன் போன்றவை விஷமுள்ள பாம்புகள் ஆகும்.. இவைகள் மனித குடியிருப்பு பகுதிகளில் மனிதர்களோடு வாழக்கூடியது..

 பச்சை பாம்பு

பச்சை பாம்பு

அதேபால, சாரைபாம்பு, மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, ஓநாய்பாம்பு போன்றவை விஷத்தன்மை இல்லாத பாம்புகளாகும்... இதற்கு நடுவில் குறைந்த அளவு விஷத்தன்மை உடைய பாம்புகளான, பச்சை பாம்பு, பூனை பாம்பு போன்றவைகளும் உள்ளன.. ஆனால், பாம்பு என்ற பொதுவான பெயரை கேட்டதுமே மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.. இதற்கு காரணம், பாம்புகளை பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ளாததுதான்.

 பச்சை பாம்பு - நல்ல பாம்பு

பச்சை பாம்பு - நல்ல பாம்பு

இதைதவிர, பாம்புகள் குறித்த தவறான தகவல்களும், காலம் காலமாகவே உலா வந்து கொண்டிருப்பதும், வதந்திகளுக்கு அடிப்படை காரணமாகும்.. உலகளவில் இது இருந்தபோதிலும், இந்தியாவில், பாம்பு தொடர்பான வதந்திகள் அதிகம் உண்டு.. உதாரணமாக, பாம்புகள் பழி வாங்கும் என்று ஆதிகாலம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.. அதேபோல, மகுடி வாசித்தால் மயங்கும் என்பார்கள்.. அதேபோல, சாரபாம்பும் நல்லபாம்பும் இணை சேரும் என்பார்கள்.. இப்படி இன்னும் ஏராளமான கட்டுக்கதைகள் தொடர்ந்து நிலவி வருகின்றன.

மூடநம்பிக்கைகள்

மூடநம்பிக்கைகள்

இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும், தவறான தகவல்களையும் தகர்க்கவே, வருடத்துக்கு ஒருமுறை சர்வதேச உலக பாம்புகள் தினத்தன்று விழிப்புணர்கள் நடத்தப்படுகின்றன.. இதை தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் சேக் உசேன் என்பவர் தொடர்ந்து நடத்தி வருகிறார்.. பாம்பினங்களை பாதுகாக்கும் நோக்குடன் இந்த விழிப்புணர்வை நடத்தி வருகிறார். மேற்க்குதொடர்ச்சி மலைகள் அதிகம் உள்ள பகுதி இங்கு புலி கரடி யானை மான் பறவைகள் ஊர்வன போன்ற பல உயினங்களும் தாவரங்களும் உள்ள இடம் என்பதால், இங்கு பாம்புகள் நடமாட்டமும் அதிகமாகும்..

பாம்புகள்

பாம்புகள்

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் மனித குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நுழைந்துவிட்டால், உடனடியாக அம்மாவட்ட மக்கள் போனை போட்டு அழைப்பது, பாம்புகளின் தோழன் சேக் உசேனைதான்.. கடந்த 8 வருடத்தில் மட்டும் 5000 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார் உசேன். ஆசியாவில் அரிதாக காணப்பட கூடிய பாம்பினங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யகூடிய ராஜநாகங்கள், மேற்குதொடர்ச்சி மலையில் அதிகமாக வாழ்ந்து வரும் நிலையில், 20 க்கும் மேற்பட்ட ராஜநாகங்கள் மீட்டுள்ளாராம் உசேன்..

பாம்புக்கடி

பாம்புக்கடி

பாம்புக்கடி குறித்து உசேன் சொல்லும்போது, "பாம்புகடி என்பது ஒரு விபத்து தானே தவிர, அது விதி இல்லை. இந்தியாவில் வருடத்திற்கு 20000 க்கும் மேற்பட்டோர் பாம்புகடியினால் இறக்கின்றனர்... அதில் 10000 க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.. இதற்கு முக்கிய காரணம் பாம்புகள் பற்றிய சரியான விழிப்புணர்வில்லை என்பதுதான். இந்த உலகம் அனைத்து உயினங்களுக்கும் சொந்தமானது.. விவசாய பகுதிகளில் முக்கிய பங்களிக்கிறது பாம்பினங்கள்.

எலிகள்

எலிகள்

வருடத்திற்கு 3000 க்கும் மேற்பட்ட எலிகளை உட்கொள்கிறது எலிகள்.. அதனால் பாம்புகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்கிறார் ஷேக் உசேன்... நேற்றைய தினம், பாம்புகள் குறித்த விழிப்புணர்வு கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.. பட்டிமன்ற பேச்சாளர் மஹமுதா மற்றும் வனவர் முருகேசன் போன்றோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.. பாம்புகள் பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மாணவிகளை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+