சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செப்டம்பர் மாதம் ரேசனில் இலவச அரிசி வாங்க சனிக்கிழமை முதல் 4 நாட்களுக்கு டோக்கன் விநியோகம்

செப்டம்பர் மாதம் ரேசன் கடைகளில் இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான டோக்கன்கள் நாளை முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வழங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் அறிவிக்க

Google Oneindia Tamil News

சென்னை: ரேசன் கடைகளில் இலவச அரிசி, கோதுமை, துவரம்பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான டோக்கன்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை நான்கு நாட்கள் வழங்கப்படும் என்று நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரேசன் கடைகளில் இலவச பொருட்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவை வழங்கப்படுகின்றன. பொது மக்களுக்கு வீடு வீடாக சென்று ரேசன் கடை ஊழியர்கள் டோக்கன்கள் கொடுப்பதன் மூலம் அந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு போய் தனி மனித இடைவெளி விட்டு பொருட்களை வாங்கி வருகின்றனர்.

Tokens for free rations to be distributed from August 29 to September 1st 2020

கொரோனா லாக்டவுன் காலம் நீடிக்கப்பட்டு வருவதால் நவம்பர் மாதம் வரை இலவச அரிசி கொடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் செப்டம்பர் மாதத்திற்கு பொருட்கள் வாங்குவது எப்படி என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை.. முதல் பேட்டி தந்த அடுத்த நாளே பாய்ந்தது.. விதி மீறல் வழக்கு!அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை.. முதல் பேட்டி தந்த அடுத்த நாளே பாய்ந்தது.. விதி மீறல் வழக்கு!

ரேசன் கடைகளில் பொருட்களை வாங்க நாளை ஆகஸ்ட் 29 முதல் 30,31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பணியாளர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும் என்றும் டோக்கனில் குறித்த நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவித்துள்ளது.

English summary
The Tamil Nadu government has announced that tokens will be issued door to door on August 29th to September 1st 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X