ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே?
சென்னை: தமிழகத்தில் வாகன ஓட்டிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக National Highways Authority of India அறிவித்துள்ளது. இதனால் தினசரி தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
நாடு முழுவதும் தற்போது 880க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 675 சுங்கச்சாவடிகளில் டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பைக்குகளைத் தவிர, கார்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து வாகனங்களும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சுங்கக் கட்டண உயர்வு ஆண்டுதோறும் நடைமுறையில் இருந்து வருகிறது. பொதுவாக ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், வழக்கமான காலத்தில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படாமல் தாமதமானது.
அந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் முதல் கட்டமாகவும், செப்டம்பர் 1ஆம் தேதி இரண்டாம் கட்டமாகவும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதேபோல் 2025ஆம் ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கமான நடைமுறைக்கு ஏற்ப, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் சுமார் 6,600 கிலோமீட்டர் நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவை அண்டை மாநிலங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பயணிகள் வாகனங்கள் உள்ளிட்டவை இந்த சாலைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலைகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும் சுங்கக் கட்டணம் முக்கிய வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன.
அவற்றில் முக்கியமானவை சென்னை-கன்னியாகுமரி, திருச்சி-சேலம், சேலம்-கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 5 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டும் அதே அளவில் உயர்வு செய்யப்படுகிறது. இந்த கட்டண உயர்வில், 60 கிலோமீட்டர் நீளமுடைய வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் உள்ள 4 சுங்கச்சாவடிகள், மதுரை வெளிவட்டச் சாலையில் உள்ள 2 சுங்கச்சாவடிகள், கிழக்கு கடற்கரைச் சாலையில் அக்கரை, மாமல்லபுரம், நாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளும் அடங்குகின்றன.
மேலும் சென்னை அருகே வானகரம், சூரப்பட்டு, சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர், தாம்பரம்-திண்டிவனம் சாலையில் உள்ள ஆத்தூர், செங்கல்பட்டு-பரனூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள பட்டறை உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாக உள்ளது. இதற்கிடையில், இந்த 60 சுங்கச்சாவடிகளைத் தவிர மீதமுள்ள 17 சுங்கச்சாவடிகளில் இரண்டாம் கட்டமாக வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் இந்த ஆண்டில் இரு கட்டங்களாக கட்டண மாற்றம் நடைமுறைக்கு வரும். மேலும் வாகன ஓட்டிகளுக்கு சில சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்து சாராத தனியார் வாகனங்களுக்கு ஆண்டுக்கு 200 முறை பயணம் செய்ய அனுமதிக்கும் வகையில் ரூ.3,000 கட்டணத்தில் வருடாந்திர சுங்க அனுமதிச்சீட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அடிக்கடி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு சில அளவில் செலவு குறையும் என்றும், எதிர்காலத்தில் சுங்க வசூல் முறையும் சீராகும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் சுங்க கட்டண உயர்வால், காய்கறிகள், பால் உள்ளிட்டவற்றில் விலை சிறிது உயரலாம் எனக் கூறப்படுகிறது.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications