Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டோல்கேட்: தமிழகத்தில் இன்று முதல் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. மலைக்க வைக்கும் சுங்க கட்டணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது.. இந்த கட்டண உயர்வு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. சுங்கக்கட்டணம் உயர்வு ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2025 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல், அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.55 வரை கட்டணம் உயர்த்தப்படுவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Toll hike tamil nadu will be effective from 12 midnight today: 29 toll plaza toll gate fare has increased

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச் சாவடிகளில் இரண்டாக பிரித்து ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது̣. அந்த வகையில், வருகிற இன்று முதல் 29 சுங்கச்சாவடிகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட இருக்கின்றன.

இதுகுறித்து, சமீபத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திருத்தப்பட்ட சுங்கக் கட்டண விவரங்கள் வெளியாகியிருந்தது.. சென்னையில் இருந்து ஆந்திரா, கர்நாடகா, கோவை மற்றும் மதுரைக்கு சென்று திரும்பும் வாகனங்கள் ஏற்கனவே செலுத்தும் கட்டணத்தை விட கூடுதலாக ரூ.55 வரை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக திருச்சி மாவட்டம் கல்லக்குடி அருகில் அமைந்துள்ள சுங்கச் சாவடியை ஒருமுறை கடந்து செல்லும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கான கட்டணம் 70 ரூபாயில் இருந்து 75 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

சிற்றூர்ந்து இலகு ரக சரக்கு வாகனங்களுக்கு ரூ.110ல் இருந்து ரூ.120 ஆக சுங்கக்கட்டணமாக வசூலிக்கப்பட்டு உள்ளது. இதே போல் பேருந்து டிரக்குகளுக்கு 235 ரூபாயில் இருந்து 255 ரூபாய் என சுங்கக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு 255 ரூபாயில் இருந்து 280 ரூபாயாகவும் பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்களுக்கு 370 ரூபாயில் இருந்து ரூ.400 ஆகவும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட உள்ளது. அதிக அளவு கொண்ட வாகனங்களுக்கான கட்டணமும் ரூ.485 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்" என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

அந்தவகையில், அதாவது, செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியை பொறுத்தவரை கார்களுக்கு 60 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 105 ரூபாயில் இருந்து 115 ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 205 ரூபாயில் இருந்து 240 ரூபாயாகவும் கட்டணம் உயர்கிறது. அதே போல் மூன்று சக்கர வாகனங்களுக்கு 225 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு சக்கர வாகனங்களுக்கு 325 ரூபாயில் இருந்து 375 ரூபாயாகவும், ஏழு சக்கரம் அல்லது அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 395 ரூபாயில் இருந்து 455 ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில், சுங்கக்கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர். சுங்கக்கட்டண உயர்வால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விளையும் உயரக்கூடும் என லாரி ஓட்டுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள்.

திடீரென இந்த கட்டண உயர்வுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.. அந்தவகையில், சுங்ககட்டணம் 55 ரூபாய் வரை உயர்த்த இருப்பதால் காய்கறி மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்திருந்தார்.. சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதால் சரக்கு கட்டணங்கள் அதிகரிப்பதன் விளைவாக காய்கறி, உணவு தானியங்களின் விலை உயரக்கூடும் என்றும், லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்களுக்கு அடிக்கடி சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதை கைவிட்டு, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் முக்கிய வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+