சென்னை கோயம்பேட்டில் தக்காளியின் விலை வீழ்ச்சி.. ஆனாலும் மக்கள் அதிர்ச்சி.. ஏன் என்னாச்சு?
சென்னை: சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.40 க்கு விற்பனையாகிறது. ஆசியாவிலேயே மிகப் பெரிய மார்க்கெட் என அறியப்படுவது கோயம்பேடு மார்க்கெட் ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
பூக்கடை, பழக்கடை, காய்கடை என தனித்தனியே இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் தக்காளியின் விலை ரூ.190 ஐ தொட்டது. சில்லறை விற்பனையில் கிலோவுக்கு ரூ.200 வரை விற்பனையானது.

இதனால் தக்காளியை வாங்க முடியாமல் மக்கள் திணறினர். ஒரு முறை கிலோ 170 க்கு தக்காளி விற்கப்பட்ட போது வாடிக்கையாளர் ஒருவர் 100 கிராம் தக்காளி கேட்டார். சரி 2 அல்லது 3 வரும் என எதிர்பார்த்தார். அதை 3 நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாமே என நினைத்தார்.
ஆனால் 100 கிராமுக்கு ஒரே ஒரு தக்காளி நின்றது. அதை பில் போட்டு வாங்கிக் கொண்டு போனதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அது போல் தக்காளி இல்லாமல் என்னென்ன சாதம் செய்யலாம் என்பதை இணையதளத்தில் போட்டு தேடினர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிலோ 60 க்கு தக்காளி விற்பனையானது.
ஆனால் அந்த தக்காளியை வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் தக்காளி விலை எப்போது குறையும் என காத்திருந்தனர். கிலோவுக்கு 10, 20 என குறைந்து ஒரு கட்டத்தில் ரூ.100 க்கு விற்பனையானது, பிறகு 90, 80 என கிலோ தக்காளி விற்பனையானது. இந்த நிலையில் நேற்று கோயம்பேட்டில் கிலோ ரூ.50 க்கு நாட்டு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் ரூ.10 குறைந்து கிலோ தக்காளி ரூ.40 க்கு விற்பனையாகி வருகிறது. பெங்களூர் தக்காளியின் விலை ரூ.60 க்கு விற்பனையாகிறது. அது போல் பொடி தக்காளி கிலோ 20 முதல் 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தற்போது ஆங்காங்கே மழை பெய்வதால் விலை குறைந்திருக்கும் போதே தக்காளியை வாங்கி குவிக்கிறார்கள். வெங்காயத்தின் விலை ரூ.35 ஆக விற்பனையாகிறது. தக்காளி விலை குறைந்து வெங்காயத்தின் விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை கிலோ 60 க்கு விற்பனையாகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications