உச்சத்தில் தக்காளி விலை.. ரூ.100ஐ தாண்டி விற்பனை.. பொதுமக்கள் பெரும் அவதி! எப்போது விலை குறையும்?
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே காய்கறி வரத்துக் கணிசமாகக் குறைந்துள்ளன. வழக்கமாக விற்பனைக்கு வருவதைக் காட்டிலும் குறைவாகவே காய்கறிகள் இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட கிட்டத்தட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயரத் தொடங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தமிழகத்தில் இப்போது கோடை முடிந்து பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனால் மாநிலத்தில் நிலவி வந்த கடும் வெப்பம் குறைந்துள்ளது. அதேநேரம் திடீரென அடிக்கும் பலத்த காற்று மற்றும் மழையால் காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
தக்காளி: குறிப்பாகத் தக்காளி விலை தமிழகத்தில் எல்லா இடங்களிலும் அதிகரித்துள்ளது.சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல சில்லறை விற்பனையில் சென்னையிலேயே பல இடங்களில் தக்காளி விலை ரூ. 100ஐ தொட்டுள்ளது. அதேபோல தேனி மாவட்டம் போடி பகுதியில் சில்லறை விற்பனையில் தக்காளி விலை ரூ. 110 விற்பனையாகிறது.
வெறும் சில நாட்களில் தக்காளி விலை இந்தளவுக்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வரத்து குறைந்ததே தக்காளி விலை இந்தளவுக்கு அதிகரிக்க முக்கிய காரணமாகும். தென்மேற்கு பருவக் காற்றால் தக்காளி செடியில் உள்ள பூக்கள் உதிர்ந்துள்ளது. இதனால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
எங்கே இருந்து: சென்னைக்கு பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் தக்காளி விற்பனைக்கு வருகிறது. அங்குப் பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளதே விலை அதிகரிக்கக் காரணமாகும். சென்னையில் வழக்கமாக விற்பனைக்கு வரும் தக்காளிகளைக் காட்டிலும் சுமார் 40% வரை வரத்து குறைந்துள்ளது.
சைவம், அசைவம் என எந்தவொரு உணவாக இருந்தாலும் தக்காளி தவிர்க்கவே முடியாது. அந்த தக்காளி விலை மளமளவென உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்வேறு உணவகங்களும் விலை உயர்வால் தக்காளி சதத்தை தங்கள் மெனுவில் இருந்தும் தூக்கிவிட்டனர். மேலும், மற்ற உணவுகளிலும் தக்காளி பயன்பாட்டைக் ஹோட்டல்கள் கணிசமாக குறைத்துவிட்டதாம்.
விலை உயர்வு: தக்காளி மட்டுமின்றி பல்வேறு காய்கறி விலையும் கூட கணிசமாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.40ஐ தாண்டி விற்பனையாகும் நிலையில், சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.80 தொட்டுள்ளது. அதேபோல கேரட் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேநேரம் கடந்த நாட்களாக 100 ரூபாய் தாண்டி விற்பனையான பீன்ஸ், வரத்து அதிகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
வழக்கமாக கோயம்பேடு சந்தையில் 7,500 டன் வரை காய்கறிகள் விற்பனைக்கு வரும்.. ஆனால் இப்போது சுமார் 6,000 டன் மட்டுமே காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறி வரத்து அதிகரித்து மீண்டும் வழக்கமான நிலைக்கு வரும் வரை காய்கறி விலை தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்தளவுக்குக் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதே விலை அதிகரிக்கக் காரணம் என சொல்லப்படுகிறது. காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications