சென்னை, கோவையில் ஒரே நாளில் தலைகீழாக மாறிய தக்காளி விலை.. வியாபாரிகளையே வியக்க வைத்த மாற்றம்
சென்னை: பொதுவாகவே தக்காளி என்பது மழை அதிகம் பெய்யும் போது வரத்து குறையும். தமிழ்நாட்டில் தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, ஒசூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் பெருமளவு குறைந்துவிட்டது. அதேபோல் தக்காளி அதிகம் விலையும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கும் வரத்து குறைத்துவிட்டது. இதனால் தக்காளி விலை 40 ரூபாயில் இருந்து 80 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
தக்காளி விலை நான்கு நாள் முன்பு வாங்கியிருந்தால் 30 ரூபாய், 40ரூபாய்க்கு தான் விற்பனையானது.ஆனால் இன்று தக்காளி விலை ஆப்பிள் போல் ஏறியிருக்கிறது. மழைப்பொழிவு அதிகரித்த காரணத்தால் தக்காளி வரத்து தமிழ்நாடு முழுவதுமே குறைந்துவிட்டது. குறிப்பாக தக்காளி அதிகம் விளையும் கிருஷ்ணகிரி, ஒசூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் விளைச்சல் குறைவாக உள்ளது. இதன்காரணமாகவும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.

இதனால் தக்காளி விலை திடீரென அதிகரிக்க தொடங்கியது. சென்னையை பொறுத்தவரை தினந்தோறும் 1,300 டன் தக்காளி தேவையாகும். ஆனால், தற்போது 600 டன் தக்காளி மட்டுமே வருகிறது. அதிலும், முதல் ரக தக்காளி 400 டன் மட்டுமே வருவதால் கிராக்கி அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளி விலை கிலோ ரூ.20 முதல் ரூ.30-க்கு விற்பனையான நிலையில், வரத்து குறைவு காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் கிலோவுக்கு ரூ.50 வரை அதிகரித்தது. தற்போது ஒரு கிலோ 80 ரூபாய் ஆக விற்பனையாகிறது. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழை குறையும்போது வரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைப் போல் கோவை, ஈரோடு உள்பட பல்வேறு நகரங்களிலும் தக்காளி விலை 80 ரூபாயை தாண்டிவிட்டது. கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மார்க்கெட்டுகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்து விட்டது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.
கோவை மார்க்கெட்டுகளுக்கு 100 டன் தக்காளி வந்த நிலையில்,. தற்போது 40 டன் முதல் 50 டன் வரையே தக்காளி வருகிறதாம். மேலும் கர்நாடகாவில் இருந்து வரும் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டதாம். இது ஒருபுறம் எனில், கோவை வந்து ஏராளமான கேரள வியாபாரிகள் தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வதால் கிராக்கி அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் தக்காளி விலை உயர வாய்ப்பு உள்ளதாக கோவை காய்கறி வியாபாரிகள் கூறினார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications