தொடர்ந்து சதம்னா எப்படி? தக்காளி 1 கிலோ ரூ100; பச்சை மிளகாய் 1 கிலோ ரூ60- பொதுமக்கள் தவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விலை 1 கிலோ ரூ100-க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் தற்போது 1 கிலோ ரூ60 முதல் ரூ100க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துவிட்டது. உதாரணமாக சென்னை கோயம்பேடுக்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால் வெறும் 600 முதல் 700 டன் தக்காளி வரத்துதான் இருக்கிறது. இதனால் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தக்காளி விலை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 1 கிலோ தக்காளி சில்லறை விலையில் ரூ100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் இதுவரை கணிசமான விலைக்கே போகாமல் இருந்த பச்சை மிளகாய் தற்போது 1 கிலோ ரூ60 முதல் ரூ100 வரை விற்பனையாகிறது. காய்கறிகளின் கணிசமான விலை உயர்வு பொதுமக்களை மிகவும் தத்தளிக்க வைத்திருக்கிறது.
சென்னை கோயம்பேடு சந்தை நிலவரம்:
- தக்காளி ரூ100
- சின்ன வெங்காயம் ரூ80
- உருளைகிழங்கு ரூ30
- கேரட் ரூ70
- பீன்ஸ் ரூ120
- கத்திரி ரூ60
- முருங்கை ரூ40
- பட்டாணி ரூ180
- பூண்டு ரூ160
- இஞ்சி ரூ200
- பச்சை மிளகாய் ரூ60
- அவரை ரூ70
சென்னை கோயம்பேடு சந்தையிலேயே தக்காளி, பச்சை மிளகாய் இந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் நகரங்களிலும் புறநகர்களிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களை பெரும் தவிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications