தக்காளிக்கு வந்துருச்சு வாழ்வு! என்னயவா குப்பையில் போட்டீங்க! வச்சு செய்ய போகுது.. பாக்கெட் பத்திரம்
சென்னை: தமிழகத்தில் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தக்காளி விலை மிகக் கடுமையாக சரிந்தது. இந்த நிலையில் தக்காளி விலை திடீரென உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ஒரே நாளை 15 ரூபாய் விலை உயர்ந்து 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மழைக்காலம் தொடங்கினால் தக்காளி விலை நூறு ரூபாயை கூட எட்டலாம் என்கின்றனர் வியாபாரிகள்.
ஒரு சீசனில் ஒரு காய்கறியின் விலை சரிவை சந்திப்பதும் மற்றொரு காய்கறியின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். மழைக் காலங்களில் தக்காளியின் விலை ஆனது மிகக் கடுமையாக அதிகரிக்கும். மழை காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி விடுவதால் மிகக் குறைந்த அளவே மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து இருக்கும்.
இதனால் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கம் குறிப்பாக. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளியின் விலை வெகுவாக அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் 150 ரூபாய் வரை கூட தக்காளி மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனையானது.

வெளிச்சந்தைகளில் 170 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பனி மற்றும் மழையின் தாக்கம் குறைந்த நிலையில், வெயில் அதிகரித்தது. அதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாததால் தக்காளி விளைச்சல் வெகுவாக அதிகரித்தது. தமிழகத்தை பொறுத்தவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், தக்காளி வரத்து அதிக அளவில் இருந்தது.
இதனால் விலை மிகக் கடுமையாக சரிந்தது. குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டினர்.
ஒரு ரூபாய்க்கு கூட தக்காளியை வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது மழையின் தாக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் 30 ரூபாயிலிருந்து நேற்று தக்காளி விலை 50 ரூபாயாக அதிகரித்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 ரூபாய் அதிகரித்து 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்த விலை சென்னை கோயம்பேடு காய்கறி மொத்த சந்தையில் மட்டும் தான் அதே நேரத்தில் வெளிச்சந்தையிலும் அவற்றை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கூடுதலாக விற்பதால் தக்காளி ஒரு கிலோ என்பது ரூபாய்க்கு பொதுமக்களுக்கு கிடைக்கிறது. வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் இனி தக்காளி விலை உச்சத்தை தொடும் என்கின்றனர் வியாபாரிகள்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications