ஒரே நாளில் தக்காளி விலை கடும் சரிவு... கிலோ ரூ.30க்கு விற்பனையால் மக்கள் ரொம்ப ஹேப்பி

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் அதன் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்கறி சந்தையில் தக்காளி வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ 160 க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி ஒரே நாளில் சட்டென்று சரிந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் தமிழகம் முழுவதும் காய்கறிகள், தக்காளி வரத்து குறைந்தது. தமிழகம் முழுவதும் தக்காளி, காய்கறிகள் விலை கடுமையாக அதிகரித்தது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் கடந்த 4 நாட்களாக 1 கிலோ தக்காளி 140 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் 50 ரூபாய் குறைந்து நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Tomato Vegetable Price Today: People are very happy with the sale at Rs. 30 per kg

இன்று தக்காளி அதிரடியாக 100 ரூபாய் குறைந்தது. இதனால் மொத்த விற்பனைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. சில்லறைக் கடைகளில் தக்காளி 1கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காய்கறிகள் இன்றைய விலை நிலவரம்

வெங்காயம் 38/32/30
நவீன் தக்காளி /50/40
நாட்டு தக்காளி 50/40/35
உருளை 32/26/22
சின்ன வெங்காயம் 55/50
ஊட்டி கேரட் 70/65/50
பெங்களூர் கேரட் 50
பீன்ஸ் 80/70/60
பீட்ரூட். ஊட்டி 50/45
கர்நாடக பீட்ரூட் 30/25
சவ் சவ் 20/18
முள்ளங்கி 40/35
முட்டை கோஸ் 25/20
வெண்டைக்காய் 60/50
உஜாலா கத்திரிக்காய் 55/50
வரி கத்திரி 40/35
காராமணி 60
பாவக்காய் 40/35
புடலங்காய் 50/40
சுரக்காய் 25/30
சேனைக்கிழங்கி 20/18
முருங்கைக்காய்120/110/90
சேம கிழங்கு 20/15
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் 15/12
பச்சை மிளகாய் 25/20
பட்டாணி 80/90
இஞ்சி 30/45
பூண்டு 60/90/130
அவரைக்காய் 90/70
மஞ்சள் பூசணி 8
வெள்ளை பூசணி ரூ.10
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 50
நூக்கள் 50
கோவைக்காய் 40/35
கொத்தவரங்காய் 40
வாழைக்காய் 6/7
வாழைதண்டு,மரம் 30
வாழைப்பூ 15
பச்சைகுடமிளகாய் .30/25
வண்ண குடமிளகாய் 150/140
கொத்தமல்லி 12
புதினா 6
கருவேப்பிலை 35
அனைத்து கீரை 30/35
தேங்காய் ஒரு காய் 35/38

மொத்த விலைக்கடைகளில் தக்காளி ஒரு பெட்டியாக வாங்கினால் ஒரு கிலோ 30 ரூபாய் முதல் 35 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். இன்று வழக்கமாக ஆந்திரா கர்நாடக மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து மொத்தம் 58 லாரிகளில் சுமார் 850 டன் தக்காளி வந்துள்ளதால் விலை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தக்காளி விற்பனைக் கடைகளில் வியாபாரம் இன்று களைகட்ட தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் கீரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+