SIR படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள்! கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்க நாளை (டிசம்பர் 11) தான் கடைசி நாள் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா அறிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு சார் எனப்படும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றது. அந்தப் பணிகளில் சில லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். போலி வாக்காளர்கள், இரட்டை பதிவுகள், உயிரிழந்தோர் பெயர்களை நீக்கவே சார் பணிகள் நடத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாளை கடைசி நாள்
தொடர்ந்து அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சிறப்பு தீவிரத் திருத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லா மாநிலங்களிலும் சார் பணிகள் நடந்து வருகிறது. இருப்பினும், இதில் ஈடுபட்டோருக்குப் பணி அழுத்தம் அதிகமாக இருப்பதாகப் பலரும் புகாரளித்த நிலையில், சார் பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் தமிழகத்தில் SIR படிவங்களை ஒப்படைக்க நாளை கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்குள் (டிசம்பர் 11) SIR படிவங்களை ஒப்படைக்க வேண்டும் என மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா கூறியிருக்கிறார்.
முக்கிய தகவல்
மேலும், தமிழகத்தில் இதுவரை 6.36 கோடி வாக்காளர்களின் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சார் பணிகளுக்காகத் தமிழ்நாடு முழுக்க 66,470 பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலம் முழுக்க கடந்த மாதம் முதல் சார் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சென்னையில் மட்டும் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இதுவரை தமிழகத்தில் பெரிய பிரச்சனை இல்லை. அதேபோல புதுச்சேரியில் மொத்தம் 10.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அங்கும் சார் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள்
அதேநேரம் சார் பணிகளுக்கு எதிராகப் பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் நபர்களைக் குறிவைத்து நீக்கவே சார் பணிகள் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகாரளிக்கின்றன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும், அதில் சார் பணிகளுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சார் பணிகளைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 16ம் தேதி தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியல் வெளியான பிறகே எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வரும். தொகுதி வாரியாக எவ்வளவு வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் என்ற தகவல் வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகே தெரிய வரும். சார் பணிகளின் போது தவறாக நீக்கப்பட்டோருக்கும் மற்றொரு வாய்ப்பு தரப்படும் என்றே தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு?











Click it and Unblock the Notifications