தக்காளி சாதம் போல் இனி சாம்பார் சாதமும் கிடைக்காது.. விண்ணை முட்டும் துவரம் பருப்பு விலை
சென்னை: துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 140 வரை விற்கப்படுகிறது. கோடை காலங்களில் கிலோ 10 ரூபாய்க்கு உதைப்பட்டு கொண்டிருக்கும் இந்த தக்காளியின் விலை தற்போது தங்கத்தை போல் உயர்ந்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி ரூ 5 குறைந்து தக்காளி ஒரு கிலோ ரூ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து மளிகை பொருட்களின் விலையும் கடும் உச்சத்தை தொட்டுள்ளதால் இல்லத்தரசிகள் கடும் வேதனையில் உள்ளனர்.

தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைந்திருப்பதால் எதிரொலியாக தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்கள் வராமல் உள்ளன.
இதனால்தான் உணவு பொருட்களின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ 90 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ 140 முதல் 170 வரை விற்பனையாகிறது.
அது போல் மிளகாய் தூள், சர்க்கரை, மிளகாய் உள்ளிட்டவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. அரிசி விலை உயர்ந்துள்ளது. அது போல் போக்குவரத்து வாகனம், சரக்கை ஏற்றி இறக்க ஆட்கள் கூலி உள்ளிட்டவை உயர்ந்துள்ளதாலும் மளிகை பொருட்கள் உயர்ந்துள்ளதாக தெரிகிறது.
மளிகை பொருட்கள் உயர்ந்தால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலையும் உயரும். இதனால் குடும்பத்தை விட்டு பிழைப்பாக வெளியூர்களில் தங்கி வேலை பார்ப்போர் ஹோட்டல்களில் சாப்பிடுவது கூடுதல் நிதிச்சுமையை கொடுக்கும் என தெரிகிறது. ஏற்கெனவே சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் விழிப்பிதுங்கி வரும் நிலையில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications