இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 15/02/2026: உதயநிதி முதல் தமிழிசை வரை! தலைவர்களின் கருத்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) வரும் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது. இன்னும் இரு மாதங்களே இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.

த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் சர்ச்சையாக பேசியது குறித்தும், விஜய் சேலத்தில் பேசியது குறித்தும், அரசியல் தலைவர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். அது பற்றிய இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (15/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

Top 10 Political Highlights Today From Udhayanidhi Stalin to TVK Rajmohan Key Leaders Statements

உதயநிதி ஸ்டாலின்

"அவர் (முதல்வர்) கேரியரோட உச்சத்துக்கே போனாலும் எப்பவுமே விரும்புறது மக்களோடு மக்களாக இருக்குறத தான்..."

தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது மகளிர் உரிமைத் தொகையினை நிறுத்திவிடலாம் என பாஜக நினைத்தது. ஆனால் இதையெல்லாம் முறியடித்து பொங்கல் பரிசு 3 ஆயிரம், கடந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய், இப்போது 5 ஆயிரம் ரூபாய் என மொத்தம் இரு மாதங்களில் 9,000 ஆயிரத்தை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

எல். முருகன்

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. இப்போது 5 ஆயிரம் வழங்கியிருப்பது தேர்தலை மனதில் வைத்து தான். ஆட்சிக்கு வந்தவுடன் ஆயிரம் ரூபாய் வழங்குவேன் என சொல்லியிருந்தார். ஆனால் 3 வருஷம் கழித்து தான் வழங்கினார்கள். விஜய் முதலில் 1 சதவீதம் ஓட்டு வாங்குவாரான்னு பாருங்க..

திருமாவளவன்

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணி ஒன்றாகவே உள்ளது. அதிமுக கூட்டணி தான் நாலாபுறமும் பிரிந்து கிடக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து கிடக்கும் கடசிகளை ஒன்றிணைக்கவே போராடும் சூழல் உள்ளது. கூட்டணி நலனை பாதிக்கும் எந்த முடிவினையும் விசிக எடுக்காது. கூட்டணி கட்சிகளுக்கு முரன்பாடு, சலசலப்பு இருந்தால் பேசி சரி செய்யலாம். மகளிர் உரிமைத் தொகை வழங்கியது முதல்வரின் ராஜதந்திர செயல்பாடு.

பிரவீன் சக்கரவர்த்தி

மகளிர் உரிமைத்தொகை ஒரு சிறந்த நலத்திட்டம். செயல்படுத்தியது பாராட்டத் தக்கது. ஆனால் அது ஒன்றே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது மூடநம்பிக்கை. கடந்த 3 ஆண்டுகளில் இதுபோல் திட்டம் அறிவித்த 9 மாநில அரசுகளில் 4 இல் மட்டுமே வெற்றி பெற்றன. 5 தோல்வியை சந்தித்தது.

மாணிக்கம் தாகூர்

மதுரை வடக்கு தொகுதியை நாம் கேட்க வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கேவிடம் கூறியிருக்கிறோம். வேறு எந்த தொகுதியினை கேட்டு வாங்குகிறீர்களோ இல்லையோ மதுரை வடக்கு தொகுதியினை கேட்டு வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். மதுரை வடக்கில் காங்கிரஸ் காரர்களே வர வேண்டும்.

திமுகவிற்கு நாங்கள் மரியாதை கொடுக்கிறோம் நீங்களும் எங்களுக்கு மரியாதை தர வேண்டும் இல்லையென்றால் திருப்பி அடிப்போம். எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணையில் ஏறி இருக்க முடியாது. நீங்கள் செய்த பல தவறுகளுக்கு நாங்கள் பழியை சுமந்து இருக்கிறோம். நீங்கள் செய்த எதையுமே நாங்கள் மறக்கவில்லை.

வானதி சீனிவாசன்

நயினார் நாகேந்திரன் மிகவும் அமைதியானவர். சட்டசபையில் கூட நாகரீகமாக பேசுபவர். நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் அப்படி பேசியது வருத்தமாக இருக்கிறது. இதை நான் அவரிடமே சொல்வேன்.

தமிழிசை

த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் எந்த உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றுதான் எங்களிடம் சொன்னார், அவர் பெண்களுக்கு மிகவும் மரியாதை கொடுப்பவர். பெண்களை இழிவுப்படுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை.

டிடிவி தினகரன்

புதிய வரவாக வந்துள்ள விஜய் வரும் தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவார். விஜயகாந்த் 60 கிமீ வேகம் என்றால், விஜய் 100 கிமீ வேகம்.. விஜய் மீது நான் பொறாமை கொள்ளவில்லை. எதார்த்தத்தை சொல்கிறேன். திமுக மாதிரி இல்லை நான் நேரடியாக பேசுபவன. விஜய்யால் திமுக கடும் பாதிப்புக்குள்ளாகும்.

தவெக ராஜ்மோகன்

"அதே டெய்லர்.. அதே வாடகை.. இந்த தேர்தல் முடியிறதுக்குள்ள இன்னும் என்னலாம் பாக்கணுமோ..? " இது கோட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வர கூட்டம் இல்ல... தளபதிக்காக வரும் கொள்கை கூட்டம்.."

திண்டுக்கல் சீனிவாசன்

பெண்களை இழிவுபடுத்தக் கூடிய கருத்து அது. ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் இந்த வார்த்தையினை சொல்லியிருக்க கூடாது. அவர் அப்படி பேசியது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது.

ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட 10 தொகுதிகளை கேட்டுள்ளோம். சீட் கொடுக்காவிட்டால் எங்கள் கட்சி சார்பில் 51 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவோம். போட்டியிடாத தொகுதிகளில் என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவு அளிப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+