இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 11/02/2026: ஸ்டாலின் - செல்லூர் ராஜூ வரை.. தலைவர்களின் நச் கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இன்னும் இரு மாதங்களே உள்ளது. இதனால், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (11/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

முதல்வர் ஸ்டாலின்
"ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும்" கூட்டணியில் முறிவு ஏற்படுவதற்காக ஆட்சியில் பங்கு என்பதை சிலர் கிளப்பி விடுகின்றனர். அது எடுபடாது. ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது என்பது காங்கிரசிஸ்க்கு நன்றாக தெரியும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்):
மக்கள் ஆட்சியா அல்லது கூட்டணி ஆட்சியா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.. 2006-இல் மக்கள் தீர்ப்பை நாம் செயல்படுத்தாததும் நம் தவறு..
நயினார் நாகேந்திரன்:
திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தது கிடையாது. கருணாநிதி காலத்தில் இருந்து இதுதான் உள்ளது. ஆட்சிக்கே வராத போது.. ஆட்சிக்கு வருவதே உறுதியாக இல்லாத நிலையில், கூட்டணி ஆட்சி பற்றி பேசுகிறார்கள். எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக முதல்வர் அவ்வாறு கூறி வருகிறார்
சீமான்:
"விஜய் கிட்ட போயிடுவோம் என சொல்லிச் சொல்லி அவரை வைத்து பேரம் பேசுகிறது காங்கிரஸ் கட்சி. ஆட்சியில் பங்கு என காங்கிரஸ் கேட்டபோதே, எந்தக் கட்சி பங்கு தருகிறதோ அங்கு செல்லுங்கள் என முதலமைச்சர் சொல்லி இருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள்.
இந்திய கம்யூனிஸ்ட் மு.வீரபாண்டியன் :
எங்கள் நோக்கம் பாஜகவை வீழ்த்துவது; அவர்கள் சேர்ந்துள்ள அணியை வீழ்த்துவது. அதிமுக தனித்து நின்றால் கூட போட்டி கடுமையாக இருக்கும். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இருப்பதால் அதிமுக படுதோல்வி அடையும். திமுக கூட்டணியில் தற்போது பெற்றுள்ள இடங்களை விட கூடுதல் இடங்களை கேட்போம். உரையாடல் மூலம் அதனை கேட்போம். அதை முக ஸ்டாலின் ஜனநாயக விரோதமாக எடுத்துக்கொள்ள மாட்டார்.
சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்:
தொகுதிப் பங்கீடு பேச்சை திமுக தாமதப்படுத்தவில்லை. திமுக குழு அமைக்கும் முன்பே குழு அமைத்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.
சேகர் பாபு:
சென்னை பாரிமுனை பகுதியில் த.வெ.க.வினரை தி.மு.க.வினர் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்திற்கு சேகர் பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று த.வெ.க.வினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தான் மோதல் ஏற்பட்டது. த.வெ.க.வினரால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.எஸ் பாரதி:
ஆட்சி அதிகாரம் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்தை அக்கட்சி தலைமைதான் கட்டுப்படுத்த வேண்டும். எங்கள் கருத்தை முதல்வர் ஸ்டாலின் உறுதிப்படுத்திவிட்டார். இது தான் திமுக நிலைப்பாடு. தேர்தல் நெருங்கிவிட்டது மற்ற வேலைகள் இருக்கிறது.
தவெக அருண் ராஜ்:
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு எடுபடாது என்று முதல்வர் சொல்லியிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து இருக்கும் நாற்காலியில் ஒரு கால்தான் திமுகவினுடையது. மற்ற மூன்று கால்கள் கூட்டணி கட்சிகளுடையது. கூட்டணி கட்சிகளை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தில் பங்களிக்க மறுக்கிறது. இதுவே சமூக நீதிக்கு எதிரான செயல். 130 க்கும் மேல் தொகுதியில் வென்றாலும் ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணி கட்சிகளின் பங்கு உள்ளது என்பதை அவர்களால் மறுக்க முடியுமா?
செல்லூர் ராஜூ:
திமுக அரசு என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை. துக்கக் தர்பார் போல ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று நம் எல்லோருக்கும் தெரியும். திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியதையே நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஒரு சொட்டு கூட மது இருக்காது என்றனர். கடந்த தேர்தல் அறிக்கையே நிறைவேற்றவில்லை. இதில் என்ன புதிதாக தேர்தல் அறிக்கை.












Click it and Unblock the Notifications