இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 1/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை.. பரபரக்கும் அரசியல் களம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனல் தெறிக்கும் கருத்துகளை பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.

தமிழக அரசியல் களம் தினம் தினம் சூடுபிடித்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை, அரசியல் மாநாடு, நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் என்று தொடர்ந்து கட்சி தலைவர்கள் பம்பரமாக சுழன்று வருகின்றனர். அந்த வகையில் அவர்கள் கூறும் கருத்துகளை சுருக்கமாக இங்கு தருகிறோம்.

Top 10 Political Statements Today

கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (26/02/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின், ‛‛தமிழும், தமிழ்நாடு நம் உயிர். அவற்றை காப்பது நம் கடமை. உழைப்பை தவிர வேறோன்று அறியேன் என சொல்லி இளமை முதல் இந்நாள் வரையில் உழைக்கிறேன். தமிழும், தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் சிறுதொண்டனாய் இருக்கிறேன். சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக இன்னும் முழுமையாக ஒப்படைத்து கொள்வேன்'' என்றார்.

தங்கமணி

அதிமுக மாஜி அமைச்சர் தங்கமணி, ‛‛வீட்டில் உள்ளவற்றை அடமானம் வைத்து போதை பொருட்களை பயன்படுத்தும் நிலைக்கு தமிழகத்தை தள்ளியுள்ளது திமுக அரசு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லாமல் மக்களை ஏமாற்றி உள்ளது'' என்றார்.

திருமாவளவன்

விசிக தலைவர் திருமாவளவன், ‛‛மதவாத சக்திகளை எதிர்க்கும் அறப்போர் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கான களம் தேர்தல் களமாக நம் முன்னால் இருக்கிறது. இந்த தேர்தல் களம் தமிழ்நாட்டுக்கும், மதவாத சக்திகளுக்கான யுத்தமாக உள்ளது. அதனை எதிர்கொள்வோம். வெல்வோம் என முதல்வர் பிரகடனம் செய்திருக்கிறார். அதற்கு அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும், இடதுசாரி சக்திகளும் துணை நிற்கிறோம்'' என்றார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ‛‛இன்று முதல்வர் ஸ்டாலி்ன் பிறந்தநாள். கூட்டணி கட்சி தலைவர், முதல்வராக இருக்கும் அவரை வாழ்த்த வந்திருக்கிறேன். ஒவ்வொரு கட்சிகளாக அழைத்து திமுக கூட்டணியில் தொகுதிகளை இறுதி செய்து வருகிறார்கள். தமிழக வாழ்வுரிமை கட்சியையும் அழைப்பதாக கூறியுள்ளார். பேச்சுவார்த்தைக்கு பிறகு எத்தனை தொகுதிகள் என்று முடிவு செய்யப்படும்'' என்றார்.

எல் முருகன்

மத்திய இணையமைச்சர் எல் முருகன், ‛‛மதுரை அரசியலில் முக்கியத்துவம் பெற்ற நகரம். இங்கு இன்று பிரதமர் மோடி வருகிறார். மதுரை மாநாடு, மதுரை பொதுக்கூட்டம் திமுகவை வீட்டுக்கு அனுப்பும் பொதுக்கூட்டம், மாநாடாக இருக்கும்'' என்றார்.

செங்கோட்டையன்

தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த தலைவர் செங்கோட்டையன், ‛‛ நாளை தமிழகத்தை ஆளுப்போவது விஜய் தான். விஜய் வீருநடை போட உள்ளார். தவெக தலைவர் மட்டுமில்லை. பிரதமர் முதல் முதல்வர் வரை எல்லோரும் எழுதி வைத்து தான் பேசி வருகிறார்'' என்றார்.

தமிழிசை சவுந்தரராஜன்

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‛‛எந்த படம் இருக்க வேண்டும் என்பது மாநாடு நடத்துவோரின் உரிமை. திமுக மாநாட்டில் முருகன், மீனாட்சி அம்மன் படத்தை வைக்கும்படி சொன்னால் வைப்பார்களா? நாங்கள் எந்த கொள்கையை முன்னெடுத்து செல்கிறோமோ.. அந்த கொள்கையில் மாறுபாடு உள்ள தலைவரின் படம் அங்கு இருக்க வேண்டுமா? என்று யோசனை செய்தார்கள். அவ்வளவு தான். இந்த படத்தை தான் வைக்க வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது'' என்றார். மதுரையில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றுள்ள மாநாட்டில் மேடையில் பெரியார் படம் அகற்றப்பட்டது சர்ச்சையான நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்.

சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛‛புதுச்சேரியில் மார்ச் 7 ல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும். முருகா திரையரங்கம் அருகே கூட்டம் நடைபெற உள்ளது. உறவுகள், எல்லோரும் மறக்காமல் கூடுவோம் - மாற்றத்தை நாடுவோம்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+