இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 20/02/2026: ஸ்டாலின் முதல் வரை! தலைவர்களின் அனல் கருத்துகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி தலைவர்களின் கருத்து மோதல்கள், அனல் பறக்கும் பேச்சுக்களால் தமிழக தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பபை கூட்டி வருகிறது. இந்நிலையில் தான் தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.

இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (20/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

tamil nadu assembly election 2026

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின், ‛‛5 ஆண்டுகள் ஆட்சி குறித்த மனநிறைவோடு நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை சிறப்பாக கையாண்டுள்ளேன். 2 மாதத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்'' என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ‛‛புனித ரமலான் மாத நோன்பு தொடங்கியுள்ள இந்த புனித நாட்களில், இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். ஈகையின் வழியில் நம்மை நடத்தும் இவ்வருள்மிகு காலத்தில், நோன்பு, நோற்கும் ஒவ்வொரு நாளும் உங்கள் பிரார்த்தனைகள் ஏற்கப்பட்டு, உங்கள் இல்லங்களில் அமைதி, நலன் மற்றும் வளம் பெருகட்டும்.'' என கூறியுள்ளார்.

கனிமொழி

திமுகவின் கனிமொழி ‛‛அதிமுகவினர் தங்களின் கூட்டணியை சரியாக வைத்து கொண்டால் போதும். எதிர்க்கட்சியின் கூட்டணி பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள்? என்று தெரியவில்லை. திமுக - காங்கிரஸ் கூட்டணி பல ஆண்டுகளாக நிலைத்து இருக்கும் கூட்டணி. அதில் எந்தவித மாறுதலும் வர வாய்ப்பில்லை'' என்றார்.

நயினார் நாகேந்திரன்

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ‛‛முதல்வர் ஒரு இடத்தில் பேசும்போது 80 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறினார். இன்னொரு இடத்தில் 90 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறியுள்ளார். கனிமொழி பேசும்போது 75 முதல் 80 சதவீதம் வரை வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறியுள்ளார். ஒவ்வொருவரின் கருத்தும் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தேர்தல் வாக்குறுதி எவ்வளவு நிறைவேற்றப்பட்டுள்ளது என்று மதிப்பெண் போட்டு பார்த்தோம். அதில் இந்த அரசு ஃபெயிலாகி உள்ளது'' என்றார்.

செங்கோட்டையன்

தவெகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், ‛‛கோடைகாலம் என்பதால் அரசு நிதி கொடுக்கவில்லை. இது தேர்தல் கோடைக்காலம் என்பதால் தான் அரசு நிதி வழங்கி உள்ளது. பொறுத்திருந்து பாருங்கள். தவெகவுடன் கூட்டணி அமைக்க கட்சிகள் வரும். எதையும் வெளிப்படையாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. அப்படி பெயரை குறிப்பிட்டால் அவர்கள் நம்முடன் வருவதற்கு தடை ஏற்படுகிறது'' என்றார்.

சீமான்

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛‛மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. நாம் தமிழர் கட்சியின் மநாாடு தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்'' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விஜய்

தவெகவின் தலைவர் விஜய், ‛‛கடப நாடக திமுக அரசின் நகராட்சி அமைச்சரின் ரூ.1,020 கோடி ஊழலை அமலாக்கத்துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்தி கொண்டு செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது.

2026 தேர்தலில் வெல்லவே முடியாத என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காக தகிடுதத்தங்களையும் தாராளாகவும், ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுகவ அரசின் உச்சியை பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கி உள்ளது'' என்று கூறியுள்ளார்.

தவெக அருண்ராஜ்

தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ்,‛‛நடிகர் விஜயின் தவெகிற்கு மத்திய பாஜக அரசு அழுத்தம் அளிக்கிறது. சிபிஐ, தணிக்கை துறை என எவ்வளவு அழுத்தங்கள் அளிக்கப்படுகிறது என்பதை மக்கள் அறிவார்கள். இவ்வளவு அழுத்தங்கள் இருந்தும் பாஜகவுடன் கூட்டணியில்லை என்பதை தைரியமாக அறிவித்துள்ளோம். ஆரம்பத்தில் பாஜக அழுத்தம் தரவில்லை. தற்போது பல்வேறு வகைகளில் அழுத்தம் தரப்படுகிறது'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+