இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 8/03/2026: ஸ்டாலின்+ எடப்பாடி + நயினார் +விஜய்.. தலைவர்கள் ‘நச்’ வார்த்தைகள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி உள்ளது. தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரமாக்கி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 24 மணிநேரத்தில் முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன், திருமாவளவன், சீமான், விஜய் உள்ளிட்ட டாப் 10 தலைவர்கள் கூறிய 'நச்' கருத்துகளை சுருக்கமாக இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. மாநிலம் முழுவதும் தேர்தல் அறிவிப்பை எதிர்பார்த்து மக்கள் காத்துள்ளனர். இதற்கிடையே தான் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.

திமுக - அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக சார்பில் அடுத்தடுதது தேர்தல் வாக்கறுதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கைள அறிவித்துள்ளது. விஜயின் தவெக வேட்பாளர்களும் ஓட்டு சேகரிப்பை தொடங்கி உள்ளனர். மேலும் விஜயின் தவெக சார்பில் நேற்று மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளளது. இந்நிலையில் தான் கடந்த 24 மணிநேரத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகளை, இன்றைய டாப் 10 பேச்சில் (8/03/2026) நறுக்கென்று உங்கள் பார்வைக்கு தருகிறோம்.
ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ''தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட மாடல் அரசு இருக்கிறது... அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!'' என்றார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, '' எனது அன்பிற்குரிய தாய்மார்களுக்குமு், எனதருமை சகோதரிகளுக்கும், எதிர்காலத்தை ஆளப்போகும் இளம் கண்மணிகளுக்கும் எனது உளம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகள்'' என்றார்.
விஜய்
தவெக தலைவர் விஜய், ''தவெக ஆட்சியில் ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு 6 கியாஸ் சிலிண்டர், 60 வயது வரை உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும். 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்ப வரை குழந்தைகளின் இடைநிற்றலே இல்லாமல் செல்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவி தொகையாக வழங்கப்படும். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளை வரவேற்க தங்க மோதிரம் வழங்கப்படும். தங்கைகளின் திருமணத்திற்காக எட்டு கிராம் தஙகமும், தரமான பட்டு சேலையும் வழங்கப்படும்'' என்றார்.
நயினார் நாகேந்திரன்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ''பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என சொல்லித்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் மத்திய அரசு ரூ 10 குறைத்தும் திமுக அரசு குறைக்கவில்லை. சிலிண்டர் விலையில் ரூ 100 குறைப்போம்னு சொல்லி அதையும் செய்யவில்லை'' என்றார்.
சீமான்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் ''முதலீடு செய்து லாபம் கொழிக்கும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது. இப்போ ஒருத்தர் எதுக்கு வந்துருக்கிறோம் என்று கூட தெரியாமல் வந்திருக்கிறார். சின்னம் எது என்றால் முகம்'' என்கிறார்.
திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்,''விஜய் 2ஆம் இடத்திற்கு வருவார் என்பது ஜோதிமணியின் கருத்து.. மக்கள் தான் தீர்மானிக்கம் சக்தி.. அது தேர்தலுக்கு பின்னரே தெரியும்.. விஜய் ஒரு புகழ்பெற்ற நடிகர்.. அதனால் ஊடகங்கள் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் அரசியலே தலைகீழாக மாறப் போவதை போன்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு இருப்பவர்கள். கடந்த காலங்களில் சினிமா மயக்கத்தில் வாக்களித்ததை போல், தற்போது வாக்களிக்க வாய்ப்பில்லை. கருத்தியலை விரிவாக விவாதிக்கக் கூடிய வகையில் மக்கள் இருக்கிறார்கள்'' என்றார்.
வானதி சீனிவாசன்
தவெக தலைவர் விஜய், சினிமாவில் பொங்கல் ஸ்பெஷல், தீபாவளி ஸ்பெஷல் திரைப்படங்களை வெளியிடுவது போல் மகளிர் தின ஸ்பெஷல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஆனால் விஜய் தனியாக நின்று ஆட்சி அமைப்பார் என்பதை யாராலும் நம்ப முடியாது.
அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அத்திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கதாகும்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
இன்றே கடைசி.. கடையை மூடும் தேர்தல் ஆணையம்! 2026ல் ஓட்டுப் போட முடியாது? என்ன செய்ய வேண்டும்? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications