சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த பெல்ட்டில் வச்சு செய்ய போகுது.. "மோச்சா" புயல் தாக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் தந்த 10 வார்னிங்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் வரும் நாட்கள் மழை எப்படி இருக்கும், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வரை தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் 18ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதேபோல் 19ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை பெரிதாக மழை இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழை..65 கிமீ வேகத்தில் சூறாவளி வீசுமாம்..மீனவர்களே கவனம்! தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழை..65 கிமீ வேகத்தில் சூறாவளி வீசுமாம்..மீனவர்களே கவனம்!

அறிக்கை

அறிக்கை

தமிழ்நாட்டில் வரும் நாட்கள் மழை எப்படி இருக்கும், காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் வடகிழக்கு பருவமழையை மேற்கு பள்ளத்தாக்கு காற்று ஹீரோவாக இருக்க போகிறதா, வில்லனாக இருக்க போகிறதா என்பதை இந்த போஸ்டில் பார்க்கலாம்.

1. காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமானில் கிழக்கில் இருந்து மேற்கு திசையை நோக்கிய இலங்கையை நோக்கி 20/21 தேதிகளில் வரும்.

2. ஈரான்-பாகிஸ்தான்-காஷ்மீர் ஆகிய பகுதிகளில் இருந்து மேற்கு காற்று தரையில் இருந்து 5 கிமீ உயர மட்டத்தை நோக்கி நகர்கிறது.

காற்று

காற்று

3. பொதுவாக இந்த மேற்கு மேற்கு பள்ளத்தாக்கு காற்று நமது மழைக்காலத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்தம் / சூறாவளிகளை இழுத்து, வங்கதேசம் அல்லது பர்மாவிற்கு கொண்டு செல்லும்.

4. இந்த முறை இந்த மேற்கு பள்ளத்தாக்கு காற்று காற்றழுத்த தாழ்வு பகுதியை இலங்கையின் வடக்கு பகுதியை நோக்கி இழுக்கிறது. தூண்டில் போட்டு மீனை பிடிப்பது போல இழுக்கிறது. இதனால் நடுவானில் மோதல் நடக்க உள்ளது. இந்த மோதலுக்கு பின்பாக மேற்கு பள்ளத்தாக்கு காற்று காற்றழுத்த தாழ்வு பகுதியை நகர அனுமதிக்கும். ஆனால் அதற்கு முன்பாக பெரிய மோதல் வானத்தில் நடக்கும். இந்த மோதல் 1 நிமிட நிகழ்வு கிடையாது. இது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நடக்கும்.. ஒன்று அல்லது 2 நாட்களுக்கு நடக்கும் மோதல் ஆகும். நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் இந்த மோதல் நடக்க போகிறது.

புயல்

புயல்

5. நமக்கு இந்த மோதல் வடக்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்களிலும், அருகாமை கடல் பகுதிகளில் நடக்க உள்ளது. இது கனமழையை உருவாக்கும். நமக்கு டிசம்பர் 20-25 தேதிகளில் கனமழை பெய்யும்.

6. இந்த மோதலுக்கு பின்பாக தாழ்வு பகுதியை, மேற்கு பள்ளத்தாக்கு காற்று போக விடும். இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை குறையும். இதனால் இந்த முறை இது புயலாக உருவெடுக்காது. மோச்சா புயல் இந்த முறை உருவாகாது. இந்த தாழ்வு பகுதி மோதலுக்கு பின் நகர தொடங்கியதும் இலங்கை - மன்னர் வளைகுடா - குமரி கடல் வழியாக சென்று அரேபியன் கடலை நோக்கி செல்லும். இந்த சமயம் தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, ராமநாதபுரம்,.கன்னியாகுமரி, நெல்லை பகுதிகளில் மழை பெய்யும்.

7. இந்த மழையை கணிப்பது மிக மிக கடினம். இந்த மோதல் எங்கே நடக்கும் என்பதை கணிப்பது கடினம். வடக்கு தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் தொடங்கி.. அதாவது வேதாரண்யம் டூ கடலூர் டூ புதுச்சேரி டூ புலிகேட் வரை மழை பெய்யும். இங்கு மழை வெச்சு செய்ய வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் மழை பெய்யாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன.

பாதிப்பு

பாதிப்பு

8. இது போன்ற மழையை ரெயின் செயலிகள் கணிப்பது கடினம். இது போன்ற மழைகள் குறைந்த நேரத்தில் அதிக மழையை கொடுத்தது வரலாற்றில் நடந்து உள்ளது.

9. இந்த போஸ்ட் என்பது சென்னைக்கு மட்டுமானது அல்ல. சென்னை உட்பட தமிழ்நாடு முழுக்க இந்த மழைக்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருகிறது.

10. இது நம்மை நெருங்கிய பின் மேலும் அப்டேட் கொடுக்கிறேன். அதுவரை மழையில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள் .

English summary
Top 10 warnings of Tamil Nadu Weatherman on the north east monsoon and cyclone .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X