"3 இன், 3 அவுட்".. அச்சாரம் போட்டாச்சு.. பறந்த சீக்ரெட் ஃபைல்.. திமுகவை நோக்கி பாஜக மேஜர் அஸ்திரம்
திமுகவை வீழ்த்த 3 விதமான காய்களை பாஜக நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது
சென்னை: திமுகவை டேமேஜ் செய்ய 3 விதமான ரூட்களை பாஜக மேலிடம் எடுத்துள்ளதாம்.. இதை திமுக எப்படி முறியடிக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உருமாறி உள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், தேசிய கட்சிகள் தயாராகி உள்ளன.. இதில் காங்கிரஸை பாஜக 6 மாதத்துக்கு முன்பேயே களத்தில் குதித்துவிட்டது.
அந்தவகையில் தமிழகத்திலும், மும்முரமாக வேலையை ஆரம்பித்து செய்து வருகிறது.. இதனிடையே, அதிமுகவின் உட்கட்சி பலவீனங்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, காய்களை நாசூக்காக நகர்த்தி வருகிறது.

ப்ளஸ் பாயிண்ட்
சில நாட்களுக்கு முன்புவரை, எடப்பாடி தரப்பு பாஜகவை எதிர்க்க தயாராகிவிட்டது என்று செய்திகள் பரபரத்த நிலையில், அதுவும் புஸ்ஸென்று போய்விட்டது.. ஒட்டுமொத்த அதிமுக தலைமைகளும், பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்ட நிலையில், பாஜக இதையும் தங்களுக்கு பிளஸ் ஆக்கி கொண்டு வருகிறது.. அந்தவகையில்தான் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசிவிட்டு வந்தது.. ஆனால், பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.. எனவே, பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியையும் வேகப்படுத்தி வருகிறது.

சிறகொடிந்த பறவை
அந்தவகையில்தான் சென்னை வந்த பாஜக தலைவர் நட்டாவிடம், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கரை தூது அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.. எடப்பாடி பழனிசாமியைவிட அளவுக்கு அதிகமான சிக்கலில் தற்போதைக்கு சிறகொடிந்துள்ளது விஜயபாஸ்கர்தான் என்கிறார்கள்.. எனவே, நட்டாவை சந்தித்து 1 மணி நேரத்துக்கும் மேலாக விஜயபாஸ்கர் பேசியதில் ஏகப்பட்ட அரசியல் கலந்துள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. பிரதமரை சந்திக்க எடப்பாடியால் அனுப்பப்பட்ட தூது என்பதையும்தாண்டி, தனக்கான பாதுகாப்பை தேடியே நட்டாவை விஜயபாஸ்கர் சந்தித்தாக கூறப்படுகிறது.. ஒருவேளை நெருக்கடிகள் அதிகமாகும்பட்சத்தில், பாஜகவில் இணையவும் தயாராக இருப்பார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஃபைல்கள்
நட்டாவின் தமிழகம் வருகையானது, பாஜகவுக்கு அதிர்வுகளையும் உண்டுபண்ணி உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, திமுக தரப்பு பற்றின புகார்கள் நட்டாவிடம் மிகப்பெரிய ஃபைல்களாக தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.. ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள்... செந்தில் பாலாஜிக்கும் சாதகமான சூழல் இல்லை.. அதனால்தான், கடந்த வாரம் ஆளுநர் தரப்பை சந்தித்த தமிழக பாஜக டீம், ஊழல் புகார் உள்ள திமுக அமைச்சர்கள் குறித்த சீக்ரெட் ஃபைல்களை தந்துள்ளதாம்.

விசாரணை வளையம்
அதுபோலவே நட்டாவிடமும் வேறுசில சீக்ரெட் பைல்கள் தரப்பட்டுள்ளது.. இதன்மூலம் திமுக தரப்புக்கு நெருக்கடி கொடுத்து அவர்களை விசாரணை வளையத்தில் உட்காரவைக்க வேண்டும் என திட்டமிடுகிறதாம் பாஜக... இதற்கு நடுவில், எடப்பாடி பழனிசாமி டீம் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தபோது, திமுகவின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு தவிர, வேறு சில புகார்களையும், வீடியோ ஆதாரத்துடன் தந்துள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருபக்கம் ஆளுநர் மூலமும், இன்னொரு பக்கம் நட்டா மூலமும், மற்றொரு பக்கம் அமித்ஷா மூலமும், திமுக பற்றின புகார்கள் பறந்துள்ள நிலையில், இதற்கான அழுத்தங்கள் விரைவில் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

சீக்ரெட் ஃபைல்கள்
ஆனால், அதற்கு முன்பாக, ஊழல் புகார்களுக்கு ஆளானவர்களை தங்கள் பக்கம் இழுக்க இந்த சீக்ரெட் பைல்கள் உதவும் என்று பாஜக நம்புகிறதாம்.. தேர்தல் நெருங்குவதற்குள் எப்படியும் திமுக + அதிமுக இரு தரப்பில் இருந்தும், முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் நகர்த்திவிட்டு, அதற்கு பிறகு, திமுகவுக்கு அழுத்தமும் நெருக்கடியும் தந்தால், அது தங்களுக்கு வாக்குகளை கூடுதலாக பெற்றுத்தரும் என்றும் கணக்கு போடுகிறதாம். அந்த அதிமுகவில் 2 புள்ளி, திமுகவில் ஒரு புள்ளி என 3 பேருக்கு வலையை விரித்துள்ளதாம் பாஜக.

அச்சாரம்
இன்னொரு பிளானும் கையில் எடுக்க போகிறது பாஜக.. ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஒருபக்கம் இருந்தாலும், சாதீய ரீதியான விவகாரங்கள், மற்றும் குடும்ப அரசியல் இவைகளை மட்டுமே பெரிதுபடுத்தி, அதையே அரசியலாக மாற்றி, பொதுமக்களிடம் கொண்டு சென்று நியாயம் கேட்கும் போராட்டத்தையும் பாஜக முன்னெடுத்து, அச்சாரம் போடப்போகிறதாம்.. இதன்மூலம் திமுகவை டேமேஜ் செய்வதுடன், மக்களின் கவனமும் தங்கள் மீது திரும்பும் என்றும் நம்புகிறது.. இப்படி பலவித வியூகங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், திமுக என்ன செய்ய போகிறது? எப்படி இவைகளை முறியடிக்க போகிறது? என்பதும் கூடுதல் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
ரூ.5000 + ரூ.8000.. ஸ்டாலின் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்.. பெண்களை தேடி வரப்போகும் பணம்! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications