சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அத்தை" இருக்காங்க, வர்றாதீங்க.. வாசப்படியிலேயே தடுக்கப்பட்ட "தலைவர்".. அதிர்ந்துபோன எடப்பாடி.. அடடே

பசும்பொன்னில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அவமரியாதை நடந்து விட்டதாக கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா குறித்த புகார் செய்தி ஒன்று அதிமுகவுக்குள் வட்டமடித்து வருகிறது.. அது எடப்பாடி பழனிசாமி காது வரை சென்றுவிட்டதாம்..!

மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து உடனடியாக, அதிமுகவின் அரசியல் ஆலோசகராக அவரை நியமனம் செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் ஓபிஎஸ். இவை இரண்டுமே ஒரே நாளில் நடந்து பரபரப்பை கிளப்பின. பண்ருட்டியாரின் ரீ-எண்ட்ரி, அதிமுகவில் உள்ள வன்னியர் தலைவர்களையும் யோசிக்க வைத்தது.

பண்ருட்டி ஆட்டம்? அண்ணே நீங்களுமா? எடப்பாடிக்கு கல்தா கொடுத்த 'மாஜி’! ஓபிஎஸ் டீமில் திடீர் ஐக்கியம்! பண்ருட்டி ஆட்டம்? அண்ணே நீங்களுமா? எடப்பாடிக்கு கல்தா கொடுத்த 'மாஜி’! ஓபிஎஸ் டீமில் திடீர் ஐக்கியம்!

பண்ருட்டி

பண்ருட்டி

அன்று, எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு நடந்தததற்கு முன்பும்சரி, அதற்கு பின்பும் சரி, பண்ருட்டியாரை தனியாக சந்தித்து பேசினார் ஓபிஎஸ்.. அதேபோல, சசிகலாவும் பண்ருட்டியை சந்தித்து பேசியிருந்தார்.. இவர்கள் அனைவரிடமும் பண்ருட்டி சொல்லியிருந்த ஒரே கருத்து, அதிமுகவில் பிளவு கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான்.. எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் மிக சிறந்த அரசியல் ஆசனாக இருந்தவர் பண்ருட்டி.. சட்டமன்ற தேர்தல் என்றாலே பண்ருட்டி தொகுதியில் ஜெயித்தவர் யார்? என்று கருணாநிதியே கேட்கும் அளவிற்கு எதிர்பார்ப்பை கிளறி விட்டனர்..

 நுணுக்கங்கள்

நுணுக்கங்கள்

அன்றைய கால அரசியலில், இவர் டெல்லி செல்கிறார் என்றாலே, தமிழக அரசியல் களமே கதிகலங்குமாம்.. அந்த அளவுக்கு சட்டநுணுக்கங்கள் முதல் அரசியல் அத்துப்படி தெரிந்தவர்தான் பண்ருட்டியார்.. அதனால்தான், உங்களை போன்றோர் எங்களுடன் இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா இருவருமே வேண்டி விரும்பி இவரை கேட்டுக் கொண்டு வந்ததை மறுக்கமுடியாது.. அரசியல் ரீதியாக தனக்கு ஆலோசனை வழங்கும் அரசியல் வழிகாட்டியாக நீங்கள் இருக்க வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியதால்தான், அதற்கு ஒப்புக்கொண்ட பண்ருட்டி ராமச்சந்திரன்..

 ஃபைல் போன்கள்

ஃபைல் போன்கள்

அப்போதுமுதல் தொடர்ந்து சட்டரீதியாக பல விஷயங்களையும் சசிகலாவுக்கு எடுத்து சொல்லியபடியே இருக்கிறார்.. அதேபோல, தேவைப்படுகிற போதெல்லாம் பண்ருட்டியாரை தொடர்புகொண்டு ஆலோசனை பெறுவதை வழக்கமாக வைத்திருந்தார் சசிகலா.. அவ்வளவு ஏன்? சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையம் அளித்திருந்த ரிப்போர்ட்டை பார்த்து சசிகலா, அதிகமாகவே அதிர்ந்துபோய்விட்டார்.. அந்த அறிக்கை தன் கைக்கு கிடைத்த மாத்திரத்தில் அதனை முழுமையாக படித்து பார்த்தப் பிறகு, சசிகலா முதலில் ஃபோன் பண்ணியது யாருக்கு தெரியுமா? பண்ருட்டி ராமச்சந்திரனுக்குத்தான்..

 பலவீனம்

பலவீனம்

அவரிடம் இந்த விஷயம் குறித்து பேசினார்.. அதற்கு பண்ருட்டியார், "அறிக்கையை நானும் பார்த்தேன். அதிமுக தொண்டர்களிடம் உங்கள் இமேஜை பலகீனப்படுத்துவதற்காகவே அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுகிறது. கவலைப்பட ஒன்றுமில்லை. தைரியமாக இருங்கள்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தைரியம் சொன்னாராம்.. இப்போது விஷயம் என்னவென்றால், அப்படிப்பட்ட பண்ருட்டி ராமச்சந்திரனையே சசிகலா அவமானப்படுத்தி விட்டதாக அதிமுகவில் புது புகார் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது... தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னுக்கு நீங்கள் வர வேண்டும் என்று பண்ருட்டியாரை அழைத்தாராம் சசிகலா.

அத்தை

அத்தை

அதன்பேரில், பண்ருட்டியாரும் மதுரைக்கு சென்றுள்ளார்.. மதுரை ஏர்போர்ட்டில் சசிகலாவை வரவேற்றார் பண்ருட்டியார். அதேபோல, சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரர் எம்ஆர் மகன் மற்றும் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் உள்ளிட்ட உறவுகள் பலரும் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து தேவர் நினைவிடம் இருக்கும் பசும்பொன்னுக்கு சென்றனர். தேவர் நினைவிடத்தில் தேவர் சிலை இருக்கும் இடத்துக்கு சசிகலா தனது சொந்தங்களுடன் உள்ளே செல்ல, பண்ருட்டியாரும் உள்ளே செல்ல எத்தனித்தபோது திடீரென தடுத்துவிட்டாராம் அண்ணன் மகன் விவேக்.

 பண்ருட்டியார்

பண்ருட்டியார்

"நீங்க உள்ளே வரவேண்டாம், அத்தை விரும்பமாட்டாங்க என்று சொல்லி பண்ருட்டியாரை தடுத்து விட்டாராம்.. இதனால் பண்ருட்டியாரும் தேவர் சிலைக்கு அருகே செல்லாமல் நின்று விட்டார்.. தேவருக்கு மரியாதை செலுத்தி வணங்கிய சசிகலாவும் கூட , பண்ருட்டியார் எங்கே காணோமே என்று தேடவில்லையாம்.. அந்த சூழலில், பண்ருட்டியார் வெளியே இருக்கிறார் என்று சசிகலாவிடம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், அப்படி சொல்லியும்கூட, அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லையாம் சசிகலா... பண்ருட்டியாரும் இது குறித்து மனவருத்தமடைந்திருக்கிறார் என்று அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.

சொதப்பல் ப்ளான்

சொதப்பல் ப்ளான்

நடந்த முடிந்த அதிமுக பொன்விழா தினத்தன்று, இதே பண்ருட்டி ராமச்சந்திரன்தான், ஓபிஎஸ் + சசிகலா தரப்புக்கு முக்கிய ஐடியா ஒன்றை தந்திருந்தார்.. தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், கடந்த ஆண்டு சசிகலா கொடியேற்றினார். அந்த கொடிகம்பத்தில், 'அதிமுக பொதுச் செயலாளர்' வி.கே.சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருக்கிறது. இந்த கொடிக் கம்பத்தில், ஓபிஎஸ்ஸை இந்த முறை கொடியேற்றும்படி, சொன்னதே பண்ருட்டியார்தானாம்.. இதனால், ஓபிஎஸ் - சசிகலா இரு தரப்பும் விரைவில் இணைய போகிறார்கள் என்பதற்கான சிக்னலை தொண்டர்களுக்கு தருவதுபோல இருக்கும் என்பதே அந்த பிளானாம்.. திட்டமிட்டபடியே இவ்வளவும் நடந்து முடிந்த நிலையில்தான், இப்படி அவமதிப்பு என்ற செய்தி கசிந்து வருகிறது.

எடப்பாடி மிஸ்டேக்

எடப்பாடி மிஸ்டேக்

பசும்பொன்னில் நடந்த இந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு தெரிந்து, மிகுந்த வருத்தப்பட்டார்களாம்.. குறிப்பாக, அதிமுகவில் இருக்கும் வன்னியர் சமூக தலைவர்கள், பண்ருட்டியாரை சசிகலா அவமானப்படுத்தியதாக சொல்லி வருகிறார்கள். கடந்த 4 நாட்களாக அதிமுக தலைவர்களிடம் பேசு பொருளாக மாறியிருக்கிறது இந்த சம்பவம்... கடந்த மாதம் திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமி பண்ருட்டியை கட்சி நீக்கம் செய்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது..

சாணக்யன்

சாணக்யன்

அதற்கு நாஞ்சில் சம்பத், "பண்ருட்டி சாதாரண நபர் கிடையாது.. அரசியல் சாணக்கியன்.. அண்ணா பேசிய பேச்சை தமிழில் வெளியிட்டவர்.. எல்லாவற்றையும் அறிந்த ஒரு சித்தனாக காட்சி தருகிறார் பண்ருட்டி.. அவரை ஒரு கிளைக்கழக செயலாளராக சுருக்கி பார்ப்பது எடப்பாடி பழனிசாமி பழனிசாமியின் அறியாமையில் உளறல்" என்று பதிலளித்திருந்தார்.. ஒருவேளை, பசும்பொன்னில் பண்ருட்டியார் அவமதிக்கப்பட்டது உண்மையானால், நாஞ்சித் சம்பத் சொன்னது, சசிகலாவுக்கும் பொருந்தும் உண்மையாகும்..!!!

சொதப்பல் ப்ளான்

சொதப்பல் ப்ளான்

நடந்த முடிந்த அதிமுக பொன்விழா தினத்தன்று, இதே பண்ருட்டி ராமச்சந்திரன்தான், ஓபிஎஸ் + சசிகலா தரப்புக்கு முக்கிய ஐடியா ஒன்றை தந்திருந்தார்.. தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில், கடந்த ஆண்டு சசிகலா கொடியேற்றினார். அந்த கொடிகம்பத்தில், 'அதிமுக பொதுச் செயலாளர்' வி.கே.சசிகலா என்று பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் இருக்கிறது. இந்த கொடிக் கம்பத்தில், ஓபிஎஸ்ஸை இந்த முறை கொடியேற்றும்படி, சொன்னதே பண்ருட்டியார்தானாம்.. இதனால், ஓபிஎஸ் - சசிகலா இரு தரப்பும் விரைவில் இணைய போகிறார்கள் என்பதற்கான சிக்னலை தொண்டர்களுக்கு தருவதுபோல இருக்கும் என்பதே அந்த பிளானாம்.. திட்டமிட்டபடியே இவ்வளவும் நடந்து முடிந்த நிலையில்தான், இப்படி அவமதிப்பு என்ற செய்தி கசிந்து வருகிறது.

English summary
Top Leader Panruti Ramachandran news and did Sasikala insult the senior leader in Pasumpon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X