பல லட்ச வாக்கு முறைகேடு! தேர்தலையே சூறையாடிட்டாங்க! யாரிந்த பிரேசில் மாடல்? ராகுலின் டாப் 10 புகார்
சென்னை: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு மோசடி நடந்ததாக இன்று குற்றஞ்சாட்டினார். கடந்த ஆண்டு நடந்த ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பல மோசடிகள் நடந்திருப்பதாக 'ஹைட்ரஜன் குண்டு' ஒன்றை போட்டுள்ளார் ராகுல் காந்தி. ஹரியானாவில் 2 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி வந்த புகார்களில் 10 முக்கியமான புகார்களை இங்கே பார்க்கலாம்.
1. ஹரியானாவில் உள்ள எட்டு வாக்காளர்களில் ஒருவர் போலியானவர், அதாவது 12.5 சதவீதம் பேர் போலி வாக்காளர்கள். ஹரியானா தேர்தல் குறித்து எடுக்கப்பட்ட அனைத்து கருத்துக்கணிப்புகளும் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணித்த நிலையில், முடிவுகள் பாஜகவின் வெற்றியை அறிவித்தன.

2. பாஜக தலைவரும், முதலமைச்சருமான நயாப் சிங் சைனி, முடிவுகள் வெளியாகும் முன் செய்தியாளர்களிடம், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி சிரித்தார்.. அந்த சிரிப்பிற்கு என்ன அர்த்தம்.. "என்ன ஏற்பாடுகள் அவை?" என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
3. ஹரியானா வாக்காளர் பட்டியலில் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் 22 பதிவுகள் இருப்பதை ராகுல் காந்தி ஆதாரமாக முன்வைத்தார். அந்தப் புகைப்படம், ஒரு பிரேசில் மாடலான மேத்யூஸ் ஃபெராரோவின் ஸ்டாக் புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படம், ஸ்டாக் புகைப்படங்களை வழங்கும் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடியது.
4. இந்த பிரேசில் பெண்ணின் புகைப்படம், "ஸ்வீட்டி, சீமா, சரஸ்வதி" போன்ற வெவ்வேறு பெயர்களில் வாக்காளர் பட்டியலில் 22 முறை இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் தலைவர் தெரிவித்தார். "வாக்குப்பதிவு ஆணையம் ஒரு நொடியில் போலிகளை நீக்க முடியும். ஏன் அதை செய்யவில்லை? காரணம் அவர்கள் பாஜகவுக்கு உதவுகிறார்கள்" என்று பல்வேறு இடங்களில் ஒரே படத்தைக் கொண்ட, ஆனால் வெவ்வேறு பெயர்களுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகளை காட்டி ராகுல் காந்தி கூறினார்.
5. ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன, இது 12.5% போலி வாக்குகள். சுமார் 93,000 முகவரிகள் செல்லாதவை. ஹரியானாவின் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக, அஞ்சல் வாக்குகள் வழக்கமான வாக்குகளின் போக்குடன் பொருந்தவில்லை,. காங்கிரஸ் கட்சி வெறும் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாகவும், மொத்த வாக்கு வித்தியாசம் 1.18 லட்சம்தான்.. என்று குறிப்பிட்டார்.
6. ஹரியானா சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 3.5 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட அனைவரும் கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரசின் குற்றச்சாட்டின்படி, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்துடன் இந்த நீக்கங்களைச் செய்திருக்கிறது.
7. பா.ஜ.க-வின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் வாக்களித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறுவதைத் தடுக்கும் சதி நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.
8. தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் வெற்றி பெறும் என கணித்திருந்தன. ஆனால், தேர்தல் முடிவுகள் அதற்கு முற்றிலும் மாறாக இருந்தன. இது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், வரலாற்றிலேயே முதல் முறையாக தபால் வாக்குகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர (EVM) வாக்குகளுக்கும் இடையே எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை தேர்தல் நடைமுறைகள் குறித்து பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
9. பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து கிராமவாசிகள் சிலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் மட்டும் 180-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ராகுல் காந்தி கிராம மக்களுடன் கலந்துரையாடினார். இது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.
10. வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி குறைவான வாக்குகளையே பெற்றிருந்ததாகவும், வாக்குத் திருட்டு மூலம் அவர் வெற்றி பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடுகளுக்கு ஆதாரமாக சில சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
11. உதாரணமாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான பிரகலாத் என்பவர், மதுரா தொகுதியில் வாக்களித்ததோடு, ஹரியானாவின் நோத்தல் சட்டமன்றத் தொகுதியிலும் வாக்களித்துள்ளார். மேலும், ஷாஷா கிரி என்ற மற்றொருவர் பதாயூர்பூரில் ஒரே வாக்குச்சாவடியில் 14 முறை வாக்களித்துள்ளார்.
12. இதேபோல், ருத்ர அபிஷேக் மற்றும் நமன் ஜெயின் ஆகிய இருவர் அதே வாக்குச்சாவடியில் 18 முறை வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரே நபர்கள் வெவ்வேறு பெயர்களிலும், வெவ்வேறு வயதிலும், வெவ்வேறு அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, பல முகவரிகளில் இருந்து வாக்களித்திருப்பது வாக்குச்சாவடிகளில் நடந்த முறைகேடுகளை உறுதிப்படுத்துவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications