இவருக்கா இப்படி கோபம் வருது! கேள்விகளால் துளைத்த அமைச்சர் ராமச்சந்திரன்! வெளவெளத்துப்போன அதிகாரிகள்!
சேலம்: எப்போதும் அதிர்ந்து கூட பேசாத சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஏற்காட்டில் இருக்கும் ரோஜா பூங்காவை பார்வையிட்ட போது அதிகாரிகளை கேள்விகளால் துளைத்தெடுத்து வறுத்தெடுத்துவிட்டார்.
அமைச்சர் ராமச்சந்திரனா இப்படி கோபப்படுவது என சுற்றுலாத்துறை அதிகாரிகள் வெளவெளத்துப் போய்விட்டனர். உரிய நிதி கொடுக்கப்பட்டும் ரோஜா பூங்காவை ஏன் பராமரிக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்றும் என்ன செய்கிறீர்கள் எனவும் அமைச்சர் வினவினார். அமைச்சரின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ஏற்காடு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தலையை ஆட்டிக்கொண்டு சமாளித்த வண்ணம் நின்று கொண்டிருந்தனர்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருப்பவர் இளித்துரை ராமச்சந்திரன். இவர் முதலில் வனத்துறை அமைச்சராக இருந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது சுற்றுலாத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். ஆய்வுக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, கள ஆய்வாக இருந்தாலும் சரி அதிகாரிகள் சொல்வதை கேட்டுக்கொண்டு மேற்கொண்டு அதிர்ந்து கூட பேசமாட்டார்.
அப்படிப்பட்ட அமைச்சர் ராமச்சந்திரனையே டென்ஷன் ஆக்கிய நிகழ்வு தான் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. ஏற்காடு படகு இல்லம், ரோஜா பூங்கா, உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்த போது, குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. அதேபோல் ரோஜா தோட்டமும் உரிய பராமரிப்பின்றி இருந்தது. இதைக்கண்டு தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அழைத்த அவர், தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இரண்டு நாட்களில் தாம் கூறிய பணிகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அமைச்சர் ராமச்சந்திரனின் ஏற்காடு ஆய்வு குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அவருடன் சேலம் மாவட்ட திமுக முக்கியப் பிரமுகர்கள் யாரும் ஏற்காடு செல்லவில்லை. இதே பவர்ஃபுல் துறைகளை கையில் வைத்திருக்கும் அமைச்சர்கள் ஆய்வுக்கு சென்றிருந்தால் சேலம் மாவட்ட திமுக பிரமுகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கூடவே சென்றிருப்பார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications