"ஆஸ்கர் நாயகன்" ரகுவை பார்க்க தெப்பக்காடு யானைகள் முகாமில் குவியும் மக்கள்.. அம்முவுடன் ஒரே சேட்டை!
சென்னை: தமிழகத்தின் முதுமலை காட்டை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவணப்படம் ஆஸ்கர் வென்றுள்ள நிலையில் அதில் நடித்துள்ள யானை ரகுவை காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாமான தெப்பக்காட்டில், காட்டு நாயக்கர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதி யானைகள் பராமரித்து வருகிறார்கள்.
2017ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயிடம் பிரிந்த ஆண் குட்டி யானையை நாய்கள் கடித்துவிட்டதால் அதன் உடலில் காயங்கள் இருந்தன. அந்த யானையை முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானை ரகு
அந்த யானைக்கு ரகு என பெயர் வைத்து பொம்மனும் பெள்ளியும் பராமரித்து வந்தனர். இந்த நிலையில் ரகுவை போல தாயை இழந்த பெண் யானைக்கு அம்மு என பெயர் வைத்து அதையும் பராமரித்து வந்தனர். இந்த யானைகளை இவர்கள் வளர்க்கும் விதத்தையும் அவை இவர்கள் மீது பாசத்தை காட்டும் விதத்தையும் பார்த்த இயக்குநர் கார்த்திகி கோன்ஸ்லேவ்ஸ் இவற்றை ஆவணப்படமாக்க விரும்பினார்.

தம்பதி
அதன்படி அந்த தம்பதியிடம் பேசிய போது நடிப்பெல்லாம் எங்களுக்கு தெரியாது என கூறினர். ஆனால் கார்த்திகியோ எங்களுக்கு நடிப்பு வேண்டாம். இயல்பாக இருந்தால் போதும். நீங்கள் செய்யும் வேலையை செய்யுங்கள், நாங்கள் ஷூட்டிங் எடுத்துக் கொள்கிறோம் என்றனர். இதற்கு தம்பதி ஓகே சொன்னார்கள். இதையடுத்து அந்த யானைக்கும் தம்பதிக்குமான அன்பையும் அரவணைப்பையும் மிக அழகாக சொல்லும் அளவுக்கு அந்த ஆவணப்படம் நேர்த்தியாகவும் இயல்பாகவும் இருந்தது.

ஆஸ்கர்
இந்த நிலையில் இந்த ஆவணப்படம் ஆஸ்கரை வென்றுள்ளது. தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு, தமிழகத்தை சேர்ந்த ஒரு இயக்குநருக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது பெருமையிலும் பெருமை. அந்த வகையில் இந்த ஆஸ்கர் கிடைக்க காரணமாக இருந்த அன்பின் வடிவங்களான பொம்மன், பெள்ளி தம்பதியையும் இயக்குநரையும் பாராட்டி வருகிறார்கள்.

யானை வசிக்கக் கூடாது
இதனிடையே குறிப்பிட்ட காலத்திற்கு மேல் ஒரே இடத்தில் யானை வசிக்கக் கூடாது என்பதால் அவை மசினக்குடியை அடுத்த தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் ஆஸ்கர் வெல்ல காரணமான அந்த சுட்டி யானை ரகுவை பார்க்க தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து சுற்றுலா பயணி கிரேஸ் கூறுகையில் நான் லண்டனில் இருந்து வருகிறேன்.

குட்டி யானைகள் சேட்டை
இங்கிருக்கும் இரு குட்டி யானைகள் ஆஸ்கர் விருது பெற்றதை அறிந்தேன். அதனால் அவற்றை பார்க்க வந்துள்ளோம். அவற்றை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அவற்றை மிகவும் ரசித்தேன். இந்த யானைகளை நான் பார்த்ததை அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என தெரிவித்தார். இவரை போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் அழகாகவே இருக்கிறது.

அதிகரிக்கும் கூட்டம்
தூரத்தில் இருந்தபடியே ரகு செய்யும் சேட்டைகளை பார்த்து மகிழ்கிறார்கள். அதன் புத்திசாலித்தனத்தை பார்த்து வியக்கிறார்கள். சிலர் அந்த யானைக்கு உணவளிக்க விரும்புகிறார்கள். இனி கோடை விடுமுறை தொடங்கவுள்ளதால் அதிகபடியான மக்கள் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றுடன் புகைப்படம் எடுக்கவும் சிலர் விரும்புகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் அனுமதி கிடையாது. எனினும் தூரத்தில் இருந்தபடியே செல்பி எடுத்து மகிழ்கிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications