சிதறிய செக்ஸ் பொம்மைகள்.. ஆசிரமம் முழுதும் ஆபாச CD.. டெல்லி சாமியாருடன் யாரந்த பெண்.. அதிரும் மக்கள்
சென்னை: டெல்லியில் பிரபல ஆசிரமத்தில் படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமாக மெசேஜ் தந்து பாலியல் டார்ச்சர் தந்த சாமியாரை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. மேலும், டெல்லி சாமியாரின் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான அதிர்ச்சிகரமான விஷயங்கள் தெரியவந்துள்ளன.. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.
டெல்லியில் வசந்த்கஞ்ச் என்ற இடத்தில் ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மேனேஜ்மெண்ட் என்ற ஆன்மீக கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.. இது சிருங்கேரியில் செயல்படும் பிரபல சாரதா மடத்துடன் தொடர்புடையதாகும்.

இந்த ஸ்ரீ சாரதா இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியன் மேனேஜ்மென்ட் படிப்பில், EWS உதவித்தொகையில் PGDM என்ற மேலாண்மையில் முதுகலை டிப்ளமோ படிப்புகளை மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
ஆபாச மெசேஜ்
ஆனால், இந்நிறுவனத்தின் மேலாளர் சைத்தியானந்த சரஸ்வதி என்ற சாமியார், 30 மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.. அதிலும், 17 மாணவிகளுக்கு வாட்ஸ்அப்பில் அசிங்கமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தந்திருக்கிறார்.
"உன்னை ஸ்டார் ஆக்குறேன்.. ஃபாரின் டிரிப் போகலாம்.. என்று சொல்லி தன்னுடைய அறைக்கு இரவில் மாணவிகளை வர வற்புறுத்தினாராம்.. அத்துடன் உடல் ரீதியாகவும் தொடர்பு கொள்ள அப்பெண்களை கட்டாயப்படுத்தியிருக்கிறார்..
லேடீஸ் ஹாஸ்டலில் ரகசிய கேமராக்களையும் வைத்து, மாணவிகளை கண்காணித்திருக்கிறார்.. இதற்கெல்லாம் பெண் வார்டன்களும், நிர்வாக ஊழியர்களும் சாமியாருக்கு உதவி செய்திருக்கிறார்கள்..
இதனால் மாணவிகள் ஆசிரம நிர்வாகிகள், ஊழியர்களிடம் புகார் தந்துள்ளனர். ஆனால், அதை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளாமல், சாமியார் சொல்வது போலவே நடந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள்.
டெல்லி ஆசிரமத்தில் அதிரடி சோதனை
பிறகுதான், கடந்த ஆகஸ்ட் 24ல் போலீசுக்கு புகார் சென்று, ஆசிரமத்தில் சோதனை நடந்தது.. ஆனால் அதற்குள் சாமியார் மாயமாகிவிட்டார்...
உயர் அதிகாரிகள் பயன்படுத்தம் நம்பர் பிளேட்டை காரில் பொருத்தி சாமியார் பயன்படுத்தி வந்த நிலையில், அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சாமியாருக்கு ரூ.8 கோடி மதிப்பிலான சொத்துகளையும் முடக்கினார்கள்.. அத்துடன் எப்ஐஆர் பதிவு செய்து, தலைமறைவான சாமியாரை தேடினார்கள்.
ஓட்டலில் சாமியார் கைது
இறுதியில் 4 நாட்களுக்கு முன்பு ஆக்ராவில் ஒரு ஓட்டலில் மறைந்திருந்த சாமியாரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.. கைதான சாமியாரின் ஒரிஜினல் பெயர் பார்த்தசாரதி என்பதாகும்.. இவர் சைதன்யானந்த சரஸ்வதி ஒடிசாவை சேர்ந்தவர்.
டெல்லி ஆசிரமத்தில் 12 வருடங்களாக தங்கி, பராமரித்து வருகிறார். ஏற்கனவே பாலியல் பல புகார்களிலும் சிக்கியவர். இப்போது மீண்டும் மாணவிகளை சீண்டி வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
தற்போது சைதன்யானந்த சரஸ்வதியை 5 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அவரிடம் துரிதமான விசாரணையும் ஆரம்பமானது.. ஆனால், இந்த விசாரணையின் போது, சாமியார் சரியாகவும், தெளிவகவும் பதில் சொல்லவில்லையாம்.. எனவே அவர் மீதான விசாரணை கடுமைப்படுத்தப்பட்டு, தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மார்பிங் போட்டோக்கள்
இதனிடையே, டெல்லி வசந்த் குஞ்சில் உள்ள சாமியாரின் நிறுவன வளாகத்தில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. அப்போது, உலகத் தலைவர்களுடன் மார்பிங் செய்யப்பட்ட போட்டோக்கள் ஆசிரமத்தில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது..
அதாவது, அந்த போலி படங்களில், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, முன்னாள் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் சாமியார் இருப்பதைக் காட்டும் போட்டோக்களும் இருந்திருக்கின்றன.. இவைகளை கைப்பற்றிய போலீசார், பல ஆட்சேபனைக்குரிய பொருட்களையும் ஆசிரமத்திலிருந்து மீட்டுள்ளனர்.
பாலியல் பொம்மை, ஆபாச வீடியோ
பாலியல் பொம்மை, ஆபாச வீடியோக்கள் அடங்கிய 5 சிடிக்களையும் போலீசார் ஆசிரமத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர்..
அதேபோல சாமியாரின் செல்போனில் பல விஷயங்களை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. பல விமான பணிப்பெண்களுடன் சேர்ந்து சாமியார் பார்த்தசாரதி போட்டோ எடுத்திருக்கிறார்.. அதேபோல, இளம்பெண்களின் செல்போன் DP-களின் ஸ்கிரீன்ஷாட்களும் கண்டறியப்பட்டுள்ளன..
அதேபோல இளம் பெண்களுடன் ஏகப்பட்ட ஆபாச மெசேஜ் அனுப்பியிருக்கிறாராம் சாமியார் பார்த்தசாரதி.. அதிலும் உடலுறவுகளை பற்றி, பல விஷயங்களை வெளிப்படையாகவே அந்த பெண்களிடம் சாமியார் விவாதித்துள்ளார்.. அந்த பாலியல் உரையாடல்களையும் போலீசார் மீட்டுள்ளனர்
ஆண்களுடன் உடலுறவு
அதிலும், ஒரு பெண்ணை தன்னுடைய Dear Baby Doll என்று செல்லமாக அழைத்துள்ளார்.. மாணவிகளுக்கு அனுப்பப்பட்ட மெசேஜ்ஜில், ஆண்களுடன் உடலுறவு வைத்துள்ளீர்களா? காண்டம் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்றெல்லாம் கேட்டதும் தற்போது அம்பலமாகியிருக்கிறது.
செல்போனில் நிறைந்திருந்த ஆபாச சாட்டிங்குகள் ஏராளமானவற்றை சாமியாரே முன்கூட்டியே நீக்கியிருக்கிறாராம்.. அதற்கான ஆதாரத்தையும் போலீசார் தற்போது மீட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் சாமியார் தலைமறைவாக இருந்தபோது, பாகேஷ்வர் மற்றும் அல்மோராவுக்கு சென்று, அங்கேயே தங்கியிருந்ததாக தெரிகிறது.. எனவே, மேற்கண்ட இடங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்து, அங்கு போலீஸ் டீமையும் அனுப்பி வைத்துள்ளன.. இதனால் சாமியார் பார்த்தசாரதி விஷயத்தில் மேலும் பல பகீர் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications