சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க எதிர்ப்பு- நாளை திமுக தொழிற்சங்கம் தொமுச, சிஐடியூ போராட்டம்
சென்னையில் தனியார் பேருந்துகள் இயக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம்.
சென்னை: சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திமுகவின் தொழிற்சங்கமாக தொமுச, இடதுசாரி இயக்கமான சிஐடியூ சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகமான மாநகர போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. தற்போது சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதிக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் முறையில் 500 பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பேருந்துகளை இயக்கும் தனியார் நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் அவற்றிற்கு உரிய இழப்பீடு அரசு தரப்பில் வழங்கப்படுமாம்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் இந்த முடிவுக்கு போக்குவரத்து தொழிற் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் ஆளும் திமுக தொழிற்சங்கமான தொமுச, திமுக கூட்டணி கட்சியான இடதுசாரிகளின் சிஐடியூ உள்ளிட்டவை இத்திட்டத்தை எதிர்த்துள்ளன.
மேலும் சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை அனைத்து பணிமனைகளிலும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தொமுச, சிஐடியூ அறிவித்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications