வந்தாச்சு தீபாவளி.. பட்டாசு இல்லாமலா? நீங்க ஊர்ல கடை போட்டு காசை அள்ளனுமா? அரசின் சூப்பர் அறிவிப்பு!
சென்னை : எத்தனை முறை வந்தாலும் சலிக்காத ஒன்றே ஒன்று தீபாவளி தான். அதிலும் புத்தாடை, பட்டாசு இல்லாமல் தீபாவளி நிறைவடையாது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் பட்டாசு கடை வைக்க விரும்புவோர் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இனிப்புகள் தயாரித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடாமல் தீபாவளி நிறைவடையாது.

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடவும் முடியாது. இந்த ஒரு நாள் விழாவுக்காக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வருடம் முழுவதும் உழைக்கின்றனர்.
கம்பி மத்தாப்பு தொடங்கி வானில் வர்ணஜாலம் காட்டும் வான வேடிக்கைகள் வரை பகல் இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது தான் தற்போது தீபாவளி ட்ரெண்டாக மாறிவிட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டாசு கடைகளை அமைக்கின்றனர்.
நிரந்தரமான கடைகள் தவிர்த்து தற்காலிக கடைகளும் தீபாவளிக்கு அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படும் பட்டாசு கடைகளில் விற்பனை பல கோடி ரூபாய்களை தொடும், ஒரு பாரம் மட்டுமே விற்பனை நடைபெற்றாலும் 10 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை கூட பட்டாசுகள் விற்பனையாகும் நிலையில், விற்பனையாளர்கள் பத்தாயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை லாபத்தை ஈட்ட முடியும்.
இதற்காக சிறிய கடைகள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் வரை பட்டாசு விற்பனையில் ஈடுபடுகின்றன. அதே நேரத்தில் விபத்து உள்ளிட்டவை ஏற்படாமல் இருக்கவும் விதிமீறல்களை தடுக்கவும் பட்டாசு விற்பனைக்காக தமிழக அரசின் உரிமச் சான்றிதழ் பெறவேண்டும். மேலும் தீயணைப்பு துறை, காவல் துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் முன் அனுமதியை பெற வேண்டும்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பட்டாசு விற்பனை செய்ய விரும்புவோர் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்,"தமிழகத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008 -ன் கீழ், அனைத்து பகுதிகளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர், விதி எண் 84-ல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி இணையதளம் (online) வழியாக 19.10.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் (https://www.tnesevai.tn.gov.in) இ-சேவை மையங்களிலும் மேற்படி விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். தற்காலிக பட்டாசு உரிமம் பெற பிற மாவட்டங்களில் உள்ளது போல் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கும் வழிமுறை சென்னை காவல் துறையின் மண்டலங்களான கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு, ஆவடி மற்றும் தாம்பரம் மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்டவிண்ணப்பங்களை 19.10.2024 க்குள் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்படி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதெனில், அல்லது தற்காலிக உரிம ஆணையையும், நிராகரிக்கப்பட்டதெனில், அதற்கான உரிமத்தை இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் அனுமதியின்றி / உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நேர்வில், தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போர், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடிட ஒத்துழைப்பு தருமாறும் அரசு முதன்மைச் செயலாளர் வருவாய் / நிருவாக ஆணையர் (மு.கூ.பொ.) கேட்டுக்கொண்டுள்ளார்." என கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications